அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

12 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல்!

உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை பற்றி..

SC Collegium

உச்சநீதிமன்றம் - file photo

Published On :

ஆந்திரம், கேரளம், உத்தரகண்ட், குவாஹாட்டி ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களுக்கு 12 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் விக்ரன் நாத் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான பரிந்துரைக்கு அனுமதி அளித்தது.

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

செப். 23 அன்று நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நிரந்திர நீதிபதிகளாக நீதிபதி மகேஸ்வர ராவ் குஞ்சாம், நீதிபதி தூட்டா சந்திர தன சேகர், நீதிபதி சல்லா குணரஞ்சன், நீதிபதி அவதானம் ஹரி ஹரநாத சர்மா மற்றும் டாக்டர் நீதிபதி யாதவள்ளி லட்சுமண ராவ் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுகளுககு உச்ச நீதிமன்றக் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, நீதிபதிகள் பி. கிருஷ்ண குமார், கே.வி. ஜெயக்குமார், முரளி கிருஷ்ணா எஸ்., ஜோபின் செபாஸ்டியன் மற்றும் பி.வி. பாலகிருஷ்ணன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்தது.

மேலும், கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி சுபாஷ் உபாத்யாயை உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும் ஒப்புதல் அளித்தது.

மற்றொரு தீர்மானத்தில், கூடுதல் நீதிபதியாக உள்ள நீதிபதி கௌசிக் கோஸ்வாமியை குவஹாட்டி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும் ஒப்புதல் அளித்தது.

கொலீஜியம் பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.