
நேபாளத்தில் விமானத்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!
நேபாளத்தில் தனியார் விமானத்தின் சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு...

கழன்று ஒடிய சக்கரம் - X
நேபாளத்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் தனியார் விமானம் தரையிறங்கும்போது, பின்புற வலது சக்கரம் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோல்பா மாவட்டத்தில் உள்ள ஜூஃபால் விமான நிலையத்தில் சீதா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் 3 விமானக் குழுவினர் என மொத்தம் 16 பேர் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், விமானம் தரையிறங்கும்போது பின்புற வலது சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது என டோல்ப மாவட்டக் காவல் அலுவலகத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் அனில் ராஜ் கிரி தெரிவித்தார்.
விமானத்திலிருந்த பயணிகளில் ஏழு பேர் வெளிநாட்டினர். வடமேற்கு நேபாளத்தில் உள்ள கர்னாலி மாகாணத்தின் டோல்பா மாவட்டத்திற்கு நோபாள்கஞ்ச் நகரிலிருந்து புறப்பட்ட விமானம் காலை 8.25 மணியளவில் ஓடுபாதையில் நின்றது.
சம்பவம் நடந்த உடனேயே விமானி இன்ஜினை அணைத்ததால், பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தின் கட்டமைப்பில் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், விமானம் ஓடுபாதையிலேயே சிக்கிக்கொண்டதால் ஜூஃபால் விமான நிலையத்தின் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு வந்துகொண்டிருந்த நேபாள ராணுவ விமானம் பாதியிலேயே திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஓடுபாதையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தை அங்கிருந்து அகற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க, தொழில்நுட்ப வல்லுநர்களை ஹெலிகாப்டர் மூலம் வரவழைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





