நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுற்றுச்சூழல்: பசுமை... தூய்மை... குளிர்ச்சி!

99999 இது எண் என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. இது தேதி. ஆம்..2009 ஆம் ஆண்டு , 9 ஆவது மாதம், 9 ஆம் தேதி இரவு 9 மணி. இதில் என்ன விசேஷம் இருக்கிறது என யோசிக்கிறீர்களா? விசேஷம் இல்லாமல் இல்லை. அன்று இ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:20 pm

வி.குமாரமுருகன்

99999 இது எண் என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. இது தேதி. ஆம்..2009 ஆம் ஆண்டு , 9 ஆவது மாதம், 9 ஆம் தேதி இரவு 9 மணி. இதில் என்ன விசேஷம் இருக்கிறது என யோசிக்கிறீர்களா? விசேஷம் இல்லாமல் இல்லை. அன்று இரவு 9 மணியிலிருந்து, 9 நிமிடம் மட்டும் விளக்குகளை அணைத்து உதவுங்கள் என்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார் சமூக ஆர்வலர் சங்கரநாராயணன்.

   யார் இந்த சங்கரநாராயணன்? எதற்காக இந்த கோரிக்கை என்று அறிந்து கொள்ள அவரைச் சந்தித்தோம்.

* உங்களைப்பற்றி...?

 நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கடையநல்லூர் கிளையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். குற்றாலம் அருகேயுள்ள மின்நகரில் வசித்து வருகிறேன். எக்ஸ்னோரா அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலராக 7 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். எனது மனைவி கல்யாணி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இரண்டு மகள்கள் முதுநிலை மருத்துவம் பயின்று வருகிறார்கள்.

* அது என்ன 99999?

பல்வேறு காரணங்களால் உலகின் புவி வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாடும் இதனை சமநிலைப்படுத்த கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது போல் நானும் புவி வெப்பத்தைக் குறைப்பதற்கான கருத்தரங்குகளை தொடர்ந்து பல பகுதிகளில் நடத்தி வருகிறேன். அதன் ஒரு கட்டமாக 2009 ஆம் ஆண்டு , 9 ஆவது மாதம், 9 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மட்டும் விளக்குகளை அணைத்து உதவுங்கள் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கேட்டுக்கொண்டேன். இதுதான் 99999.

* இதில் பலன் ஏதும் கிடைத்ததா?

ஆமாம், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனது கோரிக்கையை ஏற்று விளக்குகளை அணைத்தனர். சிறுதுளிதானே பெருவெள்ளம்.

* எங்கெல்லாம் மரக்கன்றுகளை நட்டுள்ளீர்கள்?

 பறவைகள் சரணாலயமான கூந்தன்குளத்தில் திருக்குறளை நினைவுகூறும் வகையில் 1330 மரக்கன்றுகளை நட்டோம். இதில் சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் கலந்து கொண்டார். திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நட்டோம்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சி பிரநிநிதிகள் உதவியுடன் வீடு வீடாக சென்று 5000 வீடுகளுக்கு மரக்கன்றுகளை கொடுத்தோம்.

  திருநெல்வேலியிலுள்ள மேரி சார்ஜண்ட் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்ட அன்று ஒவ்வொரு சைக்கிளிலும் மரக்கன்றுகள் வைத்துக் கொடுத்தோம்.

பொதுவாக முக்கிய பிரமுகர்களை அழைத்து மரக்கன்றுகளை நடச்செய்தால் அந்தச் செய்தி பொதுமக்களை எளிதாக சென்றடையும் என்பதால் துணைமுதல்வர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் முத்துராமலிங்கம், அமைச்சர்கள் என அனைவரையும் அழைத்து மரம் நடச்செய்து வருகிறேன்.

*  எவ்வளவு மரக்கன்றுகளை  நட்டிருப்பீர்கள்?

 கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 70,000 மரக்கன்றுகளை எக்ஸ்னோரா உள்ளிட்ட பல அமைப்புக்களின் உதவியுடன் நட்டுள்ளேன்.

* இந்த எண்ணம் எப்படி வந்தது?

பிறந்தோம்..வளர்ந்தோம்...மறைந்தோம்.  .. என்பதல்ல வாழ்க்கை. அவதரித்தோம்...ஆர்ப்பரித்தோம்... அருஞ்செயல் ஆற்றினோம் என்பதுதான் வாழ்க்கை என்பது பெரியோர் மொழி. அதன்படி என்னால் இயன்றதை சமூகத்திற்கு செய்து வருகிறேன்.

* வேறு என்ன சமூக சேவை செய்கிறீர்கள்?

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள

425 ஊராட்சி மன்றத் தலைவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம், மண்புழு உரம் தயாரிக்கும் முறை என்பன போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தினேன்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பயனை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பல்வேறு கருத்தரங்கங்களை நடத்தியதுடன், திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் குப்பைத் தொட்டிகளை வழங்கியுள்ளேன்.



* உங்கள் லட்சியம் என்ன?

தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறேன். என்னுடைய ""தாமிரபரணியைக் காப்போம்'' ""குற்றாலம் சீசன் குறைந்ததன் ரீசன்'' மற்றும் ""குமரிமுனையை காப்போம்'' போன்ற கட்டுரைகள் தினமணியில் வெளியாகியுள்ளன.            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.