அது 1974. இந் தி யா வின் முன் னணி விளம் பர நிறு வ னம் ஒன் றின் வேலையை உத றித் தள் ளி விட் டுத் தன் னு டைய நண் பர் ஜெய லட் சு மி யு டன் இணைந்து "க்ரியா'வைத் தொடங் கி னார் எஸ். ராம கி ருஷ் ணன். இந்த 35 ஆண் டு க ளில் தமி ழுக்கு அவர் அளித் தி ருக் கும் பங் க ளிப்பு அளப் ப ரி யது.
இது வரை தொண் ணூ றுக் கும் மேற் பட்ட நல்ல புத் த கங் களை அளித் தி ருக் கும் "க்ரியா', தற் கா லத் தமி ழுக்கு அளித் தி ருக் கும் மிகப் பெரிய கொடை "க் ரி யா வின் தற் கா லத் தமிழ் அக ராதி'. இந்த அக ரா தி யின் இரண் டாம் பதிப்பு, கடந்த ஆண்டில் வெளிவந்தது.
அது முதல் மு றை யா கத் தமி ழில் விரி வாக் கித் திருத் தப் பட்ட அக ரா தி யா கும். சென் னைப் புத் த கக் கண் காட் சிக் கான முன் வே லை க ளில் ஈடு பட் டி ருந்த ராம கி ருஷ் ணன், ஊட கங் க ளின் வெளிச் சத்தி லி ருந்து எப் போ தும் தள் ளியே இருப் ப வர். அவர் அளித்த பேட்டி இது:
இந் தப் புத் த கக் கண் காட் சிக்கு "க்ரியா' புதி தாக எத் த னைப் புத் த கங் க ளைக் கொண்டு வரு கி றது?
இரண்டு புத் த கங் கள். பிரெஞ்சு கவி ஞர் ழாக் ப்ரெ வ ரின் "சொற் கள்' மறு ப திப்பு; புகழ் எழு திய "மாங் கொட்ட சாமி'.
அக ராதி இரண் டாம் பதிப் புக்கு வர வேற்பு எப் படி இருக் கி றது?
நல்ல வர வேற்பு இருக் கி றது. ஆனால், தமி ழில் ஓர் அக ராதி விரி வாக் கித் திருத் தப் பட்டு, இரண் டாம் பதிப் பாக வெளி யி டப் ப டு வது இதுவே முதல் முறை என் ப தால், இரண் டாம் பதிப்பு என் பதை வாச கர் க ளுக்கு விளக்க வேண் டிய சூழல் ஏற் பட் டி ருக் கி றது. பொது வாக தமி ழைப் பொறுத்த அள வில் இரண் டாம் பதிப்பு என் பதை மறு அச் சாக் கம் என்ற அள வி லேயே அனை வ ரும் புரிந் து கொள் வ தால் ஏற் பட் டுள்ள சங் க டம் இது.
முதல் பதிப் பில் 15,875 கலைச் சொற் கள் இடம் பெற் றி ருந் தன. இரண் டாம் பதிப் பில் 21,000 கலைச் சொற் கள். முதல் பதிப்பு 1,016 பக் கங் கள் கொண் டது. இரண் டாம் பதிப்பு 1,392 பக் கங் கள். "போடு' என்ற ஒரு சொல் லுக்கு புதிய பதிப் பில் 54 பொருள் அடை யா ளம் காட் டப் பட் டுள் ளது. இலங் கைத் தமிழி லி ருந்து மட் டும் 1,700 சொற் கள் சேர்க் கப் பட் டி ருக் கின் றன. ஆனா லும், முதல் பதிப்பு இருக் கும் போது இரண் டாம் பதிப்பு ஏன் என்று வாச கர் எழுப் பும் கேள் விக் குப் பதில் அளிக்க வேண் டி யி ருக் கி றது.
மேலை நா டு க ளில் துறை வா ரி யாக, வய து வா ரி யாக எனத் தனித் த னியே பல அக ரா தி கள் இருக் கின் றன. ஆனால், இங்கு அக ராதி என் பதே ஆங் கி லம் தெரிந் து கொள் வ தற் கான ஒரு கரு வி யாக மட் டுமே பார்க் கப் ப டு கி றது. இந் தப் பின் ன ணி யில் பார்த் தால், ஓர் ஆங் கி லே யர் ஆங் கில அக ராதி வாங் கு வ தற் கான தேவையே இல்லை என்று சொல் லி வி ட லாம்.
அக ராதி என் பது வெறு மனே மொழித் தெளிவை அளிப் பது மட் டுமே அல்ல. அறி வை யும் வழங் கு வது. ஆங் கி லே யர் கள் வீட் டில் ஒவ் வொ ரு வ ரு டைய மேஜை யி லும் அக ராதி இருக் கும். மிகச் சாதா ர ண மாக அங்கு அக ராதி புழக் கத் தில் இருக் கும். குடும் பத் தோடு பேசிக் கொண் டி ருப் பார் கள். திடீ ரென யாரே னும் ஒரு புது வார்த் தை யைப் பயன் ப டுத் தி னால், அக ரா தி யைப் புரட் டு வார் கள்.
ஒரு வேளை அதில் அந்த வார்த்தை இல்லை என் றால், அந்த அக ரா தி யைப் பதிப் பித்த நிறு வ னத் தைத் தொடர் பு கொண்டு "இந்த வார்த்தை இல்லை' என்று தெரி விப் பார் கள். அடுத்த பதிப் பில் அந்த வார்த்தை வெளி வர அக் கறை எடுத் துக் கொள் வார் கள். இப் ப டித் தான் ஒட் டு மொத்த சமூ க மும் சேர்ந்து ஓர் அக ரா தியை உரு வாக் கு கி றது.
நம் மு டைய சமூக, அர சி யல் சூழ லில் இதற் கெல் லாம் நிறைய காலம் ஆக லாம்.
உங் க ளு டைய வெளி யீ டு கள் தர மாக இருக் கின் றன. ஆனால், விலை அதி க மாக இருக் கி றது என்று பர வ லாக ஒரு கருத்து இருக் கி றதே?
புத் த கம் என் பது இயந் திர ரீதி யில் தயா ரிக் கப் ப டக் கூடாது. படைப் பா ளிக்கு மதிப்பு அளிக் கும் வகை யி லும் வாச க ருக்கு மகிழ்ச்சி அளிக் கும் வகை யி லும் புத் த கத் தயா ரிப்பு இருக்க வேண் டும். உழைப்பு, தரம் ஆகி ய வற் றைக் கருத் தில் கொண்டு பார்க் கும் போது மிகக் குறை வா கவே விலையை நிர் ண யித் தி ருக் கி றோம். எடுத் துக் காட் டாக, 1392 பக் கங் கள் கொண்ட இந்த அக ரா தி யின் விலை ரூ. 495. இதை விட எப் ப டிக் குறை வான விலை யில் கொடுக்க முடி யும்? ஆகை யால், விலை அதி கம் எனக் கூறு வதை ஒப் புக் கொள் ள மாட் டேன்.
ஆனால், புத் த கங் க ளின் விலை அதி கம் எனக் கூறி புத் த கம் வாங் கு வ தைத் தவிர்ப் பது ஒரு வகை யான மனோ பா வம். பழக் க ம். தன் னு டைய அபி மான நடி க ரின் படத் தைப் பார்ப் ப தற் காக ஒரு காட் சிக்கு ரூ. 500 வரை செல வி டு ப வர் கள் பல ஆண் டு கள் பயன் ப டக் கூ டிய ஒரு புத் த கத் துக்கு சில நூறு கள் செல விட மறுப் பது இதன் வெளிப் பா டே யா கும்.
தமி ழில் தீவி ர மான செயல் பாட் டைக் கொண்ட ஒரு நல்ல விநி யோக அமைப்பு தோன் றி னால், ஒவ் வொரு புத் த கத் தை யும் பல ஆயி ரம் பிர தி கள் விற்க முடி யும் என் பது என் நம் பிக்கை.
அப் பு றம் ஊட கங் கள். தமிழ்ப் பதிப் புத் துறை இப் போது மிகப் பெரிய வளர்ச் சியை அடைந் தி ருக் கி றது. ஆனால், ஊட கங் கள் அதற்கு அளிக் கும் கவ னம் ரொம் ப வும் குறைவு. தனி மனி தர் க ளை விட அவர் க ளு டைய செயல் பா டு க ளுக்கு ஊட கங் கள் முக் கி யத் து வம் அளிக்க வேண் டும் என்று நினைக் கி றேன். உதா ர ண மாக நான் ஒரு பதிப் பா ளன். பேசப் ப டும் பொரு ளாக நான் இருப் ப தில் எனக்கு விருப் பம் இல்லை. ஆனால், என் புத் த கங் கள் இருக் கின் றன. அவை முக் கி ய மா னவை. அவற் று டன் பேசுங் கள். அவற் றைப் பற்றி பேசுங் கள். என் புத் த கங் கள் பேசும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


