கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பயிற்சி: விமானப் பணிப்பெண்ணாக பிளஸ் டூ போதும்!

பிளஸ் டூ படித்தவர்கள் விமானப் பணிப்பெண் ஆக முடியாது என்று நினைக்கிறீர்களா? ஆனால் பிளஸ் டூ படித்தவர்களும் விமானப் பணிப் பெண் மட்டுமல்ல, விமானப் பணி ஆணாகவும் வேலை செய்வதற்குப் பயிற்சியளிக்கிறார்கள் ஸ்ரீ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:12 am

ந. ஜீவா

பிளஸ் டூ படித்தவர்கள் விமானப் பணிப்பெண் ஆக முடியாது என்று நினைக்கிறீர்களா? ஆனால் பிளஸ் டூ படித்தவர்களும் விமானப் பணிப் பெண் மட்டுமல்ல, விமானப் பணி ஆணாகவும் வேலை செய்வதற்குப் பயிற்சியளிக்கிறார்கள் ஸ்ரீலேகாவும், ராஜலட்சுமி ராதாகிருஷ்ணனும்.

இந்தத் துறையில்தான் புகுந்து கலக்குவது என்றில்லாமல் எல்லாத் துறைகளிலும் பெண்கள் கலக்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஸ்ரீலேகாவும், ராஜலட்சுமியும் "டிப்ளமோ இன் அவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி அண்ட் டூரிஸம்' என்ற படிப்பைக் கற்றுக் கொடுக்கிறார்கள் அவர்களுடைய "ஹோப் இன்டர்நேஷனல் அகாதமி' மூலமாக.

சென்னை வேளச்சேரியில் அமைந்திருக்கும் அவர்களுடைய அலுவலகத்தில் அவர்களிருவரையும் சந்தித்துப் பேசினோம்.

அவர்களிடம் பேசியதிலிருந்து...,

"எங்களுடைய ஹோப் இன்டர்நேஷனல் அகாதமி மூலமாக நாங்கள் கற்றுத் தரும் இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ முடித்திருந்தால் போதும். குறைந்தபட்சம் 5 அடி 2 அங்குல உயரம் இருக்க வேண்டும். நல்ல கூர்மையான கண்பார்வை அவசியம். கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது. 17 வயதிற்கு மேல் 26 வயதிற்குள் உள்ளவர்களே இந்தப் படிப்பில் சேர முடியும்.

நாங்கள் இங்கு கற்றுத் தரும் இந்தப் பட்டயப் படிப்பின் மூலம் விமானப் பணிப் பெண் வேலை மட்டுமல்ல, விமான நிறுவனங்களில் உள்ள அலுவலகங்களிலும் வேலை செய்யலாம். அதுமட்டுமல்ல, 5 நட்சத்திர ஹோட்டல்களிலும், சுற்றுலாத்துறை நிர்வாகப் பிரிவுகளிலும் வேலை செய்யலாம். வெறும் 15 மாதத்தில் இந்தப் பயிற்சியை நாங்கள் கொடுத்துவிடுகிறோம்.

இப்போது நிறையப் பேர் பொறியியல்துறையையும், மருத்துவத்துறையையுமே விரும்புகிறார்கள். ஆனால் மிகக் குறைந்த கால அளவில், மிகக் குறைந்த படிப்பில் நல்ல வேலை வாய்ப்புத் தருவதாக நாங்கள் சொல்லித் தரும் படிப்பு உள்ளது.

சென்னையில் இந்த ஹோப் இன்டர்நேஷனல் அகாதமியை ஆரம்பிப்பதற்கு முன்பாக நேபாளத்தில் இதே பெயரில் இருந்த கல்லூரியில் டீனாக நான் வேலை செய்தேன். அந்தக் கல்லூரியை எனது சகோதரர் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

உண்மையில் இந்தக் கல்லூரியில் நாங்கள் கற்றுத் தருவது கனடாவில் உள்ள ùஸனேகா கல்லூரியின் படிப்பைத்தான். அவர்கள்தான் நேபாளத்தில் இந்தப் பயிற்சி மையத்தைத் தொடங்கச் சொன்னார்கள். நான் தமிழ்நாட்டில் தொடங்கி நடத்தினால் நன்றாக இருக்கும் என்றேன். இப்போது இந்தப் பயிற்சிக் கல்லூரி திருநெல்வேலி, நாகர்கோவில்,வேலூர், காஞ்சிபுரம், விசாகபட்டினம், கள்ளிக்கோட்டை, சிலிகுரி ஆகிய இடங்களில் உள்ளது'' என்கிறார் ஸ்ரீலேகா.

"15 மாதத்திலேயே படிக்கக் கூடிய இந்தப் படிப்பில் மாணவர்கள், மாணவிகள் இருபாலாரும் சேரலாம். வெளியூர் மாணவர்களுக்குத் தனித்தனி தங்குமிட வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம்.

கிராமப்புறங்களில் இருந்து வருகிற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச அவ்வளவாக வராது. எனவே எங்களுடைய பாடத்திட்டத்தில் முதல் ஆறு மாதங்களில் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சியை வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், ஹிந்தி, பிரெஞ்ச் ஆகிய மொழிகளையும் கற்றுத் தருகிறோம். எங்களிடம் பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளிலும் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரெஞ்ச் கற்றுத் தருகிறோம். எங்கள் பயிற்சிக் கல்லூரியில் இருந்து தருகிற டிப்ளமோ ஓர் இன்டர்நேஷனல் டிப்ளமோ. இதை வைத்து எந்த வெளிநாட்டிலும் வேலை செய்ய முடியும்.

இதைப் படிப்பதற்கு சில ஏழை மாணவர்கள் விரும்புவார்கள். அவர்களுக்கு அதற்கான வசதி இருக்காது. அவர்களுக்கு வங்கிகள் மூலமாகக் கல்விக் கடன் பெற்றுத் தருகிறோம். அப்புறம் எங்களுடைய பயிற்சிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்கும்போது, அதில் 30 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு மொத்தம் 4 லட்சம் ரூபாயைப் பிரித்து ஸ்காலர்ஷிப்பாகத் தருகிறோம்.

இந்த டிப்ளமோ படிப்பவர்கள் 5 நட்சத்திர ஹோட்டல்களில் வேலை செய்யலாம். ஏழை மாணவர்கள் விரும்பினால், அவர்களைப் படிக்கும் காலத்திலேயே பெரிய ஹோட்டல்களில் பகுதி நேர வேலைகளில் சேர்த்துவிடுகிறோம். மாதம் 4000-4500 வரை அவர்கள் இதன் மூலமாகச் சம்பாதித்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் படிப்புக் கட்டணத்தை எளிதாகக் கட்டிவிட முடிகிறது. எங்களுடைய கல்லூரி மாலை 3 மணியுடன் முடிந்து விடும் என்பதால் அவர்கள் வேலை பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை'' என்கிறார் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன்.

"இது நடைமுறை சார்ந்த படிப்பாயிற்றே. உங்களால் முறையாகப் பயிற்சி அளிக்க முடியுமா?'' என்று கேட்டோம் சீரியஸôக.

"எங்கள் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எல்லாரும் துறை சார்ந்த நிபுணர்கள். ஹாஸ்பிடாலிட்டி சொல்லித் தருபவர்கள் பெரிய ஹோட்டல்களில் வேலை செய்து ஓய்வு பெற்ற சீனியர்கள். நிபுணர்கள். சுற்றுலாத்துறையில் பணிபுரிந்த சீனியர் கெய்டுகளும் எங்களுடைய ஆசிரியர்கள். விமானத்தில் ஏர் ஹோஸ்டெஸôக வேலை செய்து ஓய்வு பெற்றவர்களே விமானத்துறைப் பாடங்களை எடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இங்கு பயிலும் மாணவர்கள் விமான நிலையங்களிலும், ஹோட்டல்களிலும் ஒரு வாரம் நேரடிப் பயிற்சி பெறும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்'' என்கிறார் ஸ்ரீலேகா.

"அப்படி என்னதான் இந்தப் படிப்பில் கற்றுத் தருகிறீர்கள்?'' என்றோம்.

" விமானத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு மேக்-அப் ஸ்கில், கஸ்டமர் ஹேண்டிலிங்,ஷேப்டி டெக்னிக்ஸ், ஏர் கிராஃப்ட் பற்றிய அடிப்படைகள், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட், யோகா, தியானம், வாழும் கலை என எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். ஹாஸ்பிடாலிட்டியில் கஸ்டமர் கேர் முக்கியம். உணவுகள், பானங்கள் பற்றிச் சொல்லித் தருகிறோம். ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உணவு, பான வகைகள் வேறு வேறு. ஓர் உணவு மேஜையில் எந்தப் பொருள் எந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் பெரிய ஹோட்டல்களில் வேலை செய்பவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். டூரிஸம் துறையில் பணி செய்பவர்களுக்கு பல்வேறு விதமான சுற்றுலாக்களை நடத்தும் திறனை ஏற்படுத்தித் தரும் பயிற்சிகளைச் சொல்லித் தருகிறோம். டூரிஸத்தில் எம்.பி.ஏ. படிப்பு உள்ளது. அதற்குச் சமமான படிப்பை நாங்கள் இங்கே சொல்லித் தருகிறோம். பொதுவாகச் சுற்றுலாத்துறை என்றால் டூரிஸ்ட் கெய்ட் வேலை என்று நினைப்பவர்களே அதிகம். சுற்றுலாத்துறை பற்றிப் படிப்பவர்கள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாங்கள் அதனுடன் கூட சுற்றுலாத்துறை நிர்வாகம் பற்றியும் கற்றுத் தருகிறோம்'' என்கிறார் ராஜலட்சுமி.

"பிற நிறுவனங்களுக்கும் உங்கள் கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம்?'' என்று கேட்டோம்.

" நாங்கள் தரும் மூன்றுவிதமான பயிற்சிகளை - அவியேஷன், டூரிஸம், ஹாஸ்பிடாலிட்டி- ஆகிய பயிற்சிகளைத் தனித்தனியாகக் கற்றுத் தரும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. ஆனால் மூன்றையும் சேர்த்து ஒரே படிப்பாகக் கற்றுத் தரும் நிறுவனம் நாங்கள் மட்டுமே'' என்கிறார் பெருமையாக ராஜலட்சுமி.

"அது மட்டுமல்ல, எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு நாங்கள் பல நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதால் எப்படியும் வேலை வாங்கிக் கொடுத்து விடுகிறோம். பிளஸ் டூ படித்த ஒருவருக்குக் குறைந்தபட்சம் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைப்பது நல்ல விஷயம்தானே? எங்களிடம் படித்த மாணவர்கள் 7 பேர் விமானக் கம்பெனிகளில் வேலை செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில் எங்களிடம் படித்த மாணவர்களுக்கு எங்களுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி வேலை வாங்கித் தந்துவிடுவோம்'' என்கிறார் ஸ்ரீலேகா குறுக்கிட்டு.

"நீங்கள் இரண்டு பேரும் இணைந்தது எப்படி?'' என்று கேட்டதும், "நாங்கள் இருவரும் இருபது வருட நண்பர்கள்'' என்கிறார்கள், ஒரே குரலில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.