பழங்களின் தேவதை பப்பாளி!
கிராமப்புறங்களில் பப்பாளி மரங்கள் வீடு தோறும் வளர்க்கப்பட்டு வந்தாலும், அதனைப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவு. இன்னும் சொல்லப் போனால் அதில் பழுக்கும் பழங்கள் பறவைகளுக்கு மட்டுமே இன்றளவும் உணவாகி வருகி


கிராமப்புறங்களில் பப்பாளி மரங்கள் வீடு தோறும் வளர்க்கப்பட்டு வந்தாலும், அதனைப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவு. இன்னும் சொல்லப் போனால் அதில் பழுக்கும் பழங்கள் பறவைகளுக்கு மட்டுமே இன்றளவும் உணவாகி வருகின்றன.
ஆனால், பப்பாளியின் பலனை நாம் அறிந்தால், இனிமேல் பறவைகள் எதுவும் பப்பாளியைச் சுவைக்க முடியாது. நிச்சயம் அப்பழங்களை நாம்தான் சாப்பிடுவோம். அந்தளவிற்கு அதில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.
பப்பாளியில் நீர்ப்பொருள் 89.6 சதவீதமும், கார்போஹைடிரேட் 9.5 சதவீதமும், புரதம், கொழுப்பு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் நிறைந்துள்ளன. மேலும் இதில் விட்டமின்கள் ஏ, சி, இ போன்றவையும் கணிசமான அளவில் உள்ளன.
தினமும் காலை உணவில் பப்பாளியை 100 கிராம் அளவிற்கு உண்டால், அன்றைய தினத்திற்குத் தேவையான விட்டமின் சத்துகளை அது நமக்கு அளிக்கும். நிறைந்த நார்ச்சத்து காரணமாக கொலஸ்ட்ராலினைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
மேலும் பப்பாளி மற்றும் அதன் இலைகளை உட்கொண்டால் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வகையான புற்றுநோய்கள் வருவதைத் தவிர்க்கலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
என்ன பப்பாளி சாப்பிட கிளம்பியாச்சா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...