பயிற்சி: இனி குறையொன்றுமில்லை!
எல்.கே.ஜி. படிக்கப் போகும் குழந்தைகளுக்கே இண்டர்வியூ வைத்துச் சேர்க்கும் காலம் இது. குழந்தைகளின் அறிவையும் திறமையையும் சோதித்துப் பார்த்துத் திறமையான குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். சில பள்ளிகளில் பிளஸ்


எல்.கே.ஜி. படிக்கப் போகும் குழந்தைகளுக்கே இண்டர்வியூ வைத்துச் சேர்க்கும் காலம் இது. குழந்தைகளின் அறிவையும் திறமையையும் சோதித்துப் பார்த்துத் திறமையான குழந்தைகளைச் சேர்க்கிறார்கள்.
சில பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் 100 க்கு 100 வெற்றி என்று தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும். அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் "பிளஸ் ஒன்'னில் மாணவர்களைச் சேர்க்கும்போதே ரொம்ப நன்றாகப் படிக்கும் மாணவர்களாகப் பார்த்துச் சேர்த்துவிடுவார்கள்.
ஆனால் கற்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்காக சென்னை சூளைமேட்டில் ஒரு பயிற்சி மையத்தை "ஸ்ரீலதா லேர்னிங் சென்ட்டர்' என்ற பெயரில் நடத்தி வருகிறார் லதா லக்ஷ்மிநாராயணன்.
லதா லக்ஷ்மிநாராயணனை அவருடைய பயிற்சி மையத்தில் சந்தித்துப் பேசினோம்.
மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்குப் பயிற்சி தருவதற்கு ஏதேனும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றிருக்கிறீர்களா?
பல் க லைக் கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்விக்கூடங்களில் இதற்கென்று நான் கற்கவில்லை. ஆனால் தனியார் நடத்தும் நிறுவனங்களில் நான் இதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறேன். நான் பெங்களூரில் உள்ள "த வொய்ட் ஈகிள் இன்டர்நேஷனல் ஸ்கூலில்' 10 ஆண்டுகளாக பிரின்ஸிபாலாக வேலை செய்தேன். அந்தப் பள்ளியில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான கல்வி கற்பிப்பதில் மிகவும் நடைமுறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இந்தப் பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன்.
உங்களிடம் எப்படிப்பட்ட குழந்தைகள் பயிற்சி பெற வருகிறார்கள்?
இங்குப் பயிற்சி பெற மெது வா கக் கற் கும் திறன் உள்ள குழந் தை கள் வரு கின் றனர். மந்த புத்தி உள்ள குழந்தைகள் வருகின்றனர். பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகள், எப்போதும் கற்பனை உலகத்தில் வாழும் குழந்தைகள், ஏதாவது ஒரு பாடத்தை மட்டும் படிக்க முடியாத குழந்தைகள் எனப் பலரும் வருகின்றனர்.
அதுபோல, பள்ளியில் சேர்ந்து படிக்கும்போது நன்றாகப் படிக்கவில்லையென்று பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்ட குழந்தைகளும் வருகின்றனர்.
8 வயது குழந்தை ஒன்றை என்னுடைய பயிற்சி மையத்திற்கு அழைத்து வந்தார்கள். அந்தக் குழந்தைக்குப் பென்சிலைக் கூட உறுதியாகப் பிடிக்க முடியவில்லை. குழந்தையின் கண்களுக்கும் கைகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. நடப்பதற்கும் சிரமப்பட்டது. அந்தக் குழந்தை என்னிடம் பயிற்சி பெற்று நன்றாக எழுதக் கற்றுக் கொண்டது.
இப்படி பலவிதமான உடற்குறைபாடு, மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகள் என்னிடம் பயிற்சி பெற வருகிறார்கள்.
என்னிடம் பயிற்சி பெற்றால் நல்ல பலன் கிடைக்கிறது என்று கேள்விப்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளை என்னிடம் அழைத்து வருகிறார்கள். சில டாக்டர்கள் கூட என்னிடம் குழந்தைகள் பயிற்சி பெறுவதற்காகப் பெற்றோர்களிடம் பரிந்துரைக்கிறார்கள். சில பள்ளிகளில் அங்குள்ள ஆசிரியர்களே அவர்களிடம் பயிலும் படிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களை என்னிடம் பயிற்சி பெறுவதற்காக அனுப்புகிறார்கள்.
சென்னையில் அம்பத்தூர், கே.கே.நகர், மேற்குமாம்பலம், புரசைவாக்கம், சி.ஐ.டி.காலனி போன்ற பல பகுதிகளில் இருந்து என்னுடைய பயிற்சி மையத்துக்கு குழந்தைகள் வருகின்றனர்.
குறைபாடு உள்ள குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கென என்ன பாடத்திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
இங்குப் பயிற்சி பெறும் மாண வர் க ளுக்கு என்று பொதுவான பாடத்திட்டம் என்று எதுவும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருவிதமான திறனுடனும், ஒவ்வொருவிதமான குறைபாட்டுடனும்தான் இங்கு வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான பயிற்சிகளைத் தர வேண்டியிருக்கிறது. எனவே எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் என்று எதுவும் நான் வைத்துக் கொள்வதில்லை.
என்ன பயிற்சிகள் கொடுக்கிறீர்கள்?
எல் லாக் குழந் தை க ளுக்கும் யோகா கற்றுத் தருகிறேன். தியானம் செய்யக் கற்றுக் கொடுக்கிறேன். ஓவியம் வரைய,தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள, நடனம் ஆட, பிறரிடம் தகவல்களை சிறப்பாகப் பரிமாறிக் கொள்ள என எல்லாத் திறமைகளையும் வளர்க்கும்விதமாக இங்கு பயிற்சி முறைகளை வைத்திருக்கிறேன். சிறந்த கையெழுத்துக்கான பயிற்சி, விளையாட்டுகள், குறுக்கெழுத்துப் போட்டி போன்றவற்றிலும் பயிற்சி கொடுக்கிறேன். கதை சொல்வதற்குப் பயிற்சி தருகிறேன். இயல்பான வளர்ச்சியுள்ள குழந்தைகளுக்கு எளிதாகப் பயிற்சி கொடுத்துவிடலாம். ஆனால் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இவற்றில் பயிற்சி கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினம்.
இங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் நான் தரும் வீட்டுப் பாடங்களை அவர்களாகவே செய்து முடிக்க வேண்டும். வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு பெற்றோர் அவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவக் கூடாது என்று சொல்லிவிடுவேன். ஏனென்றால் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் தங்களால் பிறர் உதவியில்லாமல் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகள் தங்களுடைய வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு நான் பல நடைமுறைப் பயிற்சிகளைக் கொடுக்கிறேன். உதாரணமாக சாப்பாட்டு நேரத்தில் ஒரு குழந்தை எல்லாருடைய சாப்பாட்டுப் பைகளையும் ஓர் இடத்தில் ஒழுங்காக எடுத்து வைக்க வேண்டும். இன்னொரு குழந்தை தட்டுகளை எடுத்துத் தர வேண்டும். இன்னொரு குழந்தை அவற்றைக் கழுவி சாப்பாட்டு மேஜைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் செய்வதற்கு அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறேன்.
சாப்பிடும்போது சாப்பிடுவதைக் கீழே இறைக்கக் கூடாது. சிந்தக் கூடாது. வாயின் வெளிப்புறங்களில் எல்லாம் உணவைத் தடவிக் கொண்டு சாப்பிடக் கூடாது. வாயை மூடிக் கொண்டுதான் மெல்ல வேண்டும். என்னிடம் பயிற்சி பெற வரும் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இவற்றிற்கெல்லாம் பயிற்சி தருகிறேன்.
பிறரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறேன். கத்திப் பேசக் கூடாது. புன்னகையுடன் பேச வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறேன்.
சில குழந்தைகள் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கிக் கீழே போடும். புத்தகங்களைக் கோபத்துடன் கிழித்துப்போடும். பாலைக் கொட்டிவிடும். சமையலறைக்குள் புகுந்து அங்குள்ள டப்பாக்களில் உள்ள பருப்பு போன்றவற்றைக் கீழே கொட்டும். இவையெல்லாம் எதற்காக என்றால், பெற்றோர் அவர்கள் கேட்டதை வாங்கித் தந்திருக்கமாட்டார்கள். அதனால் தனது கோபத்தைக் காட்ட குழந்தை இப்படிப்பட்ட செயல்களில் இறங்கிவிடும். அதிகமாகக் கோபப்படும் குழந்தைகளுக்கு கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று சொல்லித் தருகிறேன்.
இங்கு பயிற்சிக்காக வரும் குழந்தைகளுக்கு என்ன உணவு தர வேண்டும் என்று
பெற்றோருக்குத் தெரிவித்துவிடுவேன். சாக்லேட், ரொட்டி, ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவேன்.
அதுபோல மதிய உணவில் பச்சைக் காய்கறிகளும், கீரையும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். தயிர் சாதம், ரசம் சாதம் அவசியம் வேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்.
இதுவரை எவ்வளவு குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்திருப்பீர்கள்?
சென் னை யில் மட்டும் இதுவரை சுமார் 500 குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்திருப்பேன். பயிற்சி தருவதற்காகக் குறைந்த கட்டணமே வாங்குகிறேன். குடிசை வாழ் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு நானே வலியச் சென்று பயிற்சி தருகிறேன். அதற்காக நான் எந்தக் கட்டணமும் அவர்களிடம் வாங்குவதில்லை. அதுபோல என்னிடம் பயிற்சி பெறுவதற்காக வரும் எந்தக் குழந்தையும் அவர்களுக்கு எவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதிலும் அவர்களுக்கு நிச்சயமாகப் பயிற்சி தருவேன். யாரையும் வேண்டாம் என்று சொல்லமாட்டேன்.
உங்கள் பயிற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக எதைக் கருதுகிறீர்கள்?
பள் ளி யில் படிக்கும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தைப் படிப்பதற்குச் சிரமப்பட்டாலோ, அல்லது எல்லாப் பாடங்களையும் படிப்பதற்குத் திணறினாலோ அங்குள்ள ஆசிரியர்கள் என்னிடம் பயிற்சி பெற பெற்றோரிடம் பரிந்துரைக்கிறார்கள். மாணவர்கள் வந்து என்னிடம் பயிற்சி பெறுவதற்குப் பள்ளியில் அனுமதியும் கொடுத்துவிடுகிறார்கள். மாணவர்கள் பள்ளிக்குப் போவதற்குப் பதிலாக, என்னுடைய பயிற்சி மையத்திற்கு வர வேண்டும். என்னிடம் பயிற்சி முடித்துத் திரும்பவும் பள்ளிக்குச் செல்கிற போது அந்த மாணவர்களுக்கு டெஸ்ட் வைத்து அவர்கள் கற்கும் திறனில் நல்ல முன்னேற்றம் வந்திருக்கிறதா என்று சோதித்த பின்பே சேர்த்துக் கொள்கிறார்கள். இது எனது பயிற்சி முறைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
மறக்க முடியாத நிகழ்ச்சி?
எனது சேவை யைப் பாராட்ட கவர் னர் சுர் ஜித் சிங் பர் னாலா ஒரு முறை என்னை நேரில் அழைத் துப் பேசி யதை என்னால் மறக்கவே முடியாது.
ந.ஜீவா
படங்கள்: ப.இராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...