நெட் ஜோக்ஸ்
ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு திருடன், ஒரு வழக்கறிஞர் மூவரும் ஒரே சமயத்தில் இறந்து போனார்கள். சொர்க்கத்தின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ""நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உடனடியாக உள்ளேவிடுவேன்'


ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு திருடன், ஒரு வழக்கறிஞர் மூவரும் ஒரே சமயத்தில் இறந்து போனார்கள். சொர்க்கத்தின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ""நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உடனடியாக உள்ளேவிடுவேன்'' என்று வாசலில் இருந்த தேவதை சொன்னது. முதலில் ஆசிரியரிடம் தேவதை கேட்டது,"" ஐஸ்பெர்கில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய பிரபல கப்பலின் பெயர் என்ன?''
டைட்டானிக் என்று சொன்னார் ஆசிரியர். ""நீங்கள் பாஸ். உள்ளே செல்லலாம்'' என்று அனுப்பி வைத்தது தேவதை. அடுத்து திருடனிடம்,""விபத்தில் எத்தனை பேர் இறந்து போனார்கள்?'' என்று கேட்டது. ""டைட்டானிக் திரைப்படத்தை பார்த்த வகையில் ஆயிரத்து ஐநூறு பேர் இறந்து போனார்கள்'' என்று பதிலளித்தான் திருடன். அவனும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டான். கடைசியாக வழக்கறிஞரைப் பார்த்து தேவதை கேட்டது,""ஓ.கே. இறந்து போன அவர்களது பெயர்களை இப்போது நீங்கள் சொல்லுங்கள்.''
மரணப் படுக்கையில் படுத்திருந்த கண்ணன் தன்னுடைய மனைவியிடம் சொன்னான், ""உன்னிடம் உண்மையை சொல்லாமல் இறக்க என்னால் முடியாது. நம்முடைய திருமணத்திற்குப் பிறகு உன்னை முழுக்க முழுக்க ஏமாற்றியிருக்கிறேன். இரவு நேரங்களில் நான் தாமதமாக வந்தபோதெல்லாம் வேலைதான் காரணம் என்று சொன்னேன் அல்லவா? உண்மையில் அப்போதெல்லாம் யாராவது ஒரு பெண்ணுடன்தான் தங்கியிருப்பேன். ஒரு பெண்ணுடன் மட்டுமல்ல; பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன்.'' அதைக் கேட்ட மனைவி அமைதியாக கணவனைப் பார்த்தாள், ""எதற்காக உனக்கு விஷம் கொடுத்தேன் என்று நீ நினைத்ததுண்டா?''
புதிதாக திருமணம் செய்து கொண்ட மனைவி, வேலையிலிருந்து திரும்பிய கணவனிடம் சொன்னாள்,""உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இப்போது நம் வீட்டில் இரண்டு பேர்தானே இருக்கிறோம். சீக்கிரமாகவே நாம் மூன்று பேராகப் போகிறோம்.'' சிரித்தபடியே மனைவியை கட்டியணைத்துக் கொண்டான் கணவன். ""நீங்கள் இப்படி சந்தோஷப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும். நாளை முதல் என்னுடைய அம்மா இங்கே வந்து தங்கப் போகிறார்'' என்றாள்.
தொழிலதிபர் ஒருவர் பாருக்குள் நுழைந்து ""டபுள் மார்ட்டினி'' என்று ஆர்டர் செய்தார். வந்தவுடன் "மட மட'வென்று குடித்தவர், தன்னுடைய சட்டை பாக்கெட்டை சற்று நீக்கிவிட்டுப் பார்த்தார். மீண்டும் ""டபுள் மார்ட்டினி'' என்று ஆர்டர் செய்தார். வந்ததும் குடித்தார். மீண்டும் தன்னுடைய சட்டை பாக்கெட்டை சற்று நீக்கிவிட்டுப் பார்த்தார். மீண்டும் ஆர்டர் செய்தார். பார் ஊழியர் மதுவை கொண்டுவந்து வைத்த பின் கேட்டார்,""சார் நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் கொண்டுவந்து தருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் உங்கள் சட்டையை திறந்து பார்க்கிறீர்களே அது ஏன்?'' ""சட்டைப் பைக்குள் என்னுடைய மனைவியின் புகைப்படம் இருக்கிறது. எப்போது அவள் எனக்கு அழகாகத் தெரிகிறாளோ அப்போதுதான் இதுதான் லிமிட் என்று குடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுவேன்'' என்றார் அவர்.
பிரபல மனோதத்துவ நிபுணர் ஒருவரை சந்தித்த அழகி ஒருத்தி கேட்டாள்,""சாதாரண மனநிலையில் உள்ள ஒருவர் உங்களிடம் வருவதாக வைத்துக் கொள்ளுங்கள் "அவருக்கு மூளைக் கோளாறு இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?''
""இதில் எவ்வித சிரமமும் இல்லை. ரொம்ப சுலபம். சின்னக் கேள்வியொன்றை கேட்பேன். அதற்கு அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி பதில் சொன்னால்போதும். கண்டுபிடித்துவிடலாம்''என்று சொன்னார் டாக்டர்.
""என்ன கேள்வி?''
""கேப்டன் குக் இந்த உலகத்தை மூன்று முறை சுற்றி வந்தார். எந்த சுற்றில் அவர் இறந்துபோனார்?''
அந்த அழகி சற்று நேரம் யோசித்தாள். பின்னர் சிரித்தபடியே கேட்டாள், ""உங்களுக்கு வேறு கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றவில்லையா? மன்னியுங்கள். நான் சரித்திரத்தில் ரொம்பவும் வீக்.''
ஒரு நாள் காலை ஏரியைப் பற்றி அதிகமாக தெரிந்திராத பெண்ணொருத்தி படகிலேறி ஏரிக்குள் சென்றாள். சற்று தொலைவில் படகை நிறுத்திவிட்டு தன்னுடன் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள். அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி அவளைப் படகுடன் கரைக்கு வரச் சொன்னார். ""குட் மார்னிங் மேடம். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ""புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். இதுகூடத் தெரியாமல் இப்படியொரு கேள்வியா?'' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
""இங்கு மீன் பிடிக்கக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.
""ஐயாம் சாரி சார்! நான் மீன் பிடிக்கவில்லை'' என்று சொன்னாள் அவள்.
""அது தெரிகிறது. இருந்தாலும் இந்தப் படகில் மீன் பிடிப்பதற்கான சாதனங்கள் அனைத்தும் தயாராக உள்ளன. எப்போது வேண்டுமானாலும் மீன் பிடிக்க ஆசை வரலாமல்லவா? அப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்'' என்று அதிகாரி சொன்னார்.
""அப்படியானால் நீங்கள் என்னை கற்பழிக்க முயற்சித்ததாக கூச்சலிட வேண்டி வரும்'' என்றாள் அவள்.
""அது எப்படி? நான் உங்களைத் தொடக்கூட இல்லையே?'' என்று அதிர்ச்சியுடன் சொன்னார் அதிகாரி.
""உண்மைதான். ஆனால் நீங்கள் ஓர் ஆண். எப்போது வேண்டுமானாலும் என்னை கற்பழிக்க முயற்சிக்கலாமல்லவா?''
சட்டென்று சுதாரித்த அதிகாரி,""தேங்க்ஸ் மேடம்! ஹேவ் எ நைஸ் டே!'' என்று சொல்லி நகர்ந்தார்.
நீதி: எப்போதும் பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். அவர்களும் யோசிப்பாங்க இல்லையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...