மனநலம்: திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப...!

""நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது பூட்டை நான்கு தடவை இழுத்துப் பார்த்துத் தொங்குகிறீர்களா? அது பரவாயில்லை. எல்லாரும் செய்வதுதான். ஆனால் அவ்வாறு பார்த்துவிட்டு வேலைக்குச் சென்ற பின்பு, அலுவலகத்தில
மனநலம்: திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப...!
Updated on
3 min read

""நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது பூட்டை நான்கு தடவை இழுத்துப் பார்த்துத் தொங்குகிறீர்களா? அது பரவாயில்லை. எல்லாரும் செய்வதுதான். ஆனால் அவ்வாறு பார்த்துவிட்டு வேலைக்குச் சென்ற பின்பு, அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டைச் சரியாகப் பூட்டினோமா என்று பதற்றப்படுகிறீர்களா? அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து பூட்டு சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று சோதிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஓசிடி என்று சொல்லக்கூடிய அப்ùஸஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் என்ற மனநோய் வந்திருக்கிறது என்று அர்த்தம்'' என்கிறார் சென்னை தியாகராயநகரில் உள்ள மனநல மருத்துவர் ஆனந்த் பாலன்.

 ""சில மாணவர்கள் தேர்வுக்கு முதல்நாள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள். தேர்வுக்குக் கிளம்பும் முன்பு அவர்களுடைய ராசியான பேனாவை படிப்பதை விட்டுவிட்டு ஒரு மணி நேரமாகத் தேடிக் கொண்டிருப்பார்கள். உறவினர் யாராவது மரணமடைந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கும் மரணம் வரும் என்று பயப்படுவார்கள். இதெல்லாம் எல்லாருக்கும் இருப்பதுதான். அளவுக்கு மீறிய மன அழுத்தம் இருக்கும்போது இப்படிப்பட்ட செயல்களைச் செய்வார்கள். மன அழுத்தம் குறைந்த பிறகு சாதாரணமாகிவிடுவார்கள். இவையெல்லாம் மனநோய்கள் அல்ல. ஆனால் இவற்றையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மனநோய் ஆகிவிடுகிறது'' என்கிறார் அவர்.

 ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதுதானே நீங்கள் சொல்லும் ஓசிடி - அப்ùஸஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் - மனநோய்? என்று கேட்டோம்.

 ""ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது மட்டுமல்ல. ஒரு சிந்தனையைத் திரும்பத் திரும்பச் செய்வதும் சேர்த்துதான் ஓசிடி. சிந்தனை என்றால் தேவையில்லாத, பயன்தராத சிந்தனை. அப்படிச் சிந்திப்பது அர்த்தமற்றது என்று தெரியும். ஆனால் சிந்திக்காமல் இருக்க முடியாது. அதில் ஒன்றுதான் நான் முதலில் சொன்ன வீட்டைச் சரியாகப் பூட்டினோமா? என்ற சிந்தனை. இதைச் சிந்தனைச் சுழற்சி என்று சொல்லலாம்.

 சிலர் கைகளைச் சோப்புப் போட்டு நன்றாகக் கழுவுவார்கள். ஒரு தடவை அல்ல. ஐந்தாறு தடவை கூட அல்ல. ஒரு சோப்பு தீர்ந்து போகிற அளவுக்குக் கழுவுவார்கள். அப்படியும் கைகளில் கிருமிகள் இருப்பதாகப் பயப்படுவார்கள். பஸ்ஸில் செல்லும்போது மேலே எல்லாரும் கையைப் பிடிக்கும் இடத்தில் கை வைக்க மாட்டார்கள். ஏடிஎம்மில் பணம் எடுப்பார்கள். ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல, பதினெட்டுத் தடவை பணத்தை எண்ணிப் பார்ப்பார்கள். அத்தனை தடவை எண்ணிப் பார்த்தால்தான் அவர்கள் திருப்தியடைவார்கள். அப்படி எண்ணிப் பார்ப்பது சரியல்ல என்று அவர்களுக்குத் தெரியும். என்றாலும் அவர்களால் அப்படிப் பலமுறை பணத்தை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. சிலர் வீட்டைவிட்டுக் கிளம்புவார்கள். திரும்பவும் உள்ளே வருவார்கள். மீண்டும் வெளியே போவார்கள். மீண்டும் உள்ளே வருவார்கள். வாசலைப் பதினேழு முறை தாண்டினால்தான் வெளியே செல்லும்போது ஆபத்து வராது என்று நினைப்பார்கள். இப்படி செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்வதைச் செயல் சுழற்சி என்று சொல்லலாம்.

 சிலருடைய சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கும். எதற்கெடுத்தாலும் திட்டிக் கொண்டிருப்பார்கள். அலுவலகத்திற்குச் சென்றால் மேனேஜரைத் திட்டுவார்கள். காரணம் எதுவும் இருக்காது. வீட்டில் உள்ள பெண்கள் எல்லாரும் எந்த ஆடையும் அணியாமல் இருப்பதாகச் சிலருக்குத் தோன்றும். இவையெல்லாம் ஓசிடி மனநோயின் சில வெளிப்பாடுகள்'' என்றார்.

 இந்த மனநோய் ஏன் வருகிறது? பரம்பரை பரம்பரையாக இந்த நோய் வருமா? என்ற கேள்விக்குத், ""தாய், தந்தைக்கு இந்த மனநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் இந்நோய் வர வாய்ப்புண்டு. ஆனால் அப்படி வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நரம்பு மண்டலத்தில் நரம்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்குக் காரணம். சிந்தனை நரம்பு மண்டலத்தைச் சார்ந்த செயல். எந்தச் சிந்தனையை வைத்துக் கொள்வது? எதை ஒதுக்குவது? போன்ற கட்டுப்பாட்டுத் திறனை இழந்துவிடுவதே இந்த நோய். இப்படி சிந்தனையைக் கட்டுப்படுத்தாமல் போவதற்குக் காரணம், நரம்பு மண்டலத்தில் உள்ள ரசாயனப் பொருளான ஸீரோ டோனினின் (நஉதஞ பஞசஐச) குறைபாடே. ஸீரோ டோனின் குறைந்துவிட்டால் சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஸீரோ டோனின் ஒருவருக்கு ஏன் குறைந்து விடுகிறது என்பதற்கான காரணத்தை அவ்வளவு துல்லியாகமாகக் கண்டுபிடித்துவிடவும் முடியாது. சாப்பிடுவதில் ஏற்படும் குறைகளினால் இந்தப் பிரச்னை வராது. அளவுக்கதிகமான துன்பம் ஒருவருக்கு வரும்போது ஸீரோ டோனின் குறைந்துவிடும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஏன் ஒருவருக்கு ஓசிடி மனநோய் வந்தது தெரியவில்லை என்பது அவருக்கு செய்யப்படும் சிகிச்சைகளில் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்துவதில்லை'' என்கிறார் உறுதியாக.

 ஓசிடி மனநோய் வந்தவர்களுக்கு என்ன சிகிச்சை? என்று கேட்டோம்.

 ""ஓசிடி மனநோயாளிக்கு உள்ள குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு ஏற்ப முதலில் அவர்களுக்கு மருந்துகளைத் தருவோம். மூன்று நான்கு வாரங்களில் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு மனநல சிகிச்சையை ஆரம்பிப்போம். ஈஆர்பி என்று சொல்லக்கூடிய (உலடஞநமதஉ அசஈ தஉநடஞசநஉ டதஉயஉசபஐஞச) மனநல சிகிச்சையை ஆரம்பிப்போம். சாதாரணமாக ஒருவர் பதற்றமாக இருப்பது அதிகபட்சம் 15- 20 நிமிடங்கள்தாம். அதற்கு மேல் பதற்றம் தானாகவே தணிந்து விடும். பதற்றமடைவதற்கான அதே சூழ்நிலை இருந்தாலும் தொடர்ந்து பதற்றமாக இருக்காது. ஆனால் ஓசிடி மனநோய் உள்ளவர்கள் தொடர்ந்து பதற்றமாகவே இருப்பார்கள். அவர்கள் எதற்காகப் பயப்படுகிறார்களோ, அந்தப் பயத்தை நீக்க முயற்சி செய்வோம். உதாரணமாக கைகளைப் பலதடவை கழுவுபவர்கள் எதிலும் கை வைக்க மாட்டார்கள். கதவின் கைப்பிடியில் கூட கை வைக்கக் கூடப் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களை கையைக் கழுவாமல் கதவின் கைப்பிடியில் நீண்ட நேரம் கை வைக்கச் சொல்வோம். அப்படித் தொடர்ந்து செய்தால் சிறிது நாளில் கைகளில் கிருமி தொற்றிக் கொள்ளும் என்கிற பயம் இல்லாமற் போய்விடும். அவர்களின் சிந்தனையும் மாறிவிடும். பதற்றம் ஏற்படாது. இது ஓர் உதாரணம்தான். இதுபோல பிற ஓசிடி மனநோய் உள்ளவர்களுக்கும் அவர்களுக்குப் பொருத்தமான மனநல சிகிச்சை அளிப்போம். சிகிச்சை சிலருக்கு 3 மாதங்களிலேயே முடிந்து விடலாம். சிலருக்கு ஒருவருடம் கூட ஆகலாம்.'' என்றார்.

 தெருவில் சிலரைப் பார்க்கலாம். தெருவில் உள்ள குப்பைகளையெல்லாம் பொறுக்கிக் கொண்டே இருப்பார்கள். சிலர் டிராபிக் போலீஸ் போல நடுரோட்டில் நின்று கொண்டு கைகளைக் காட்டிக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் எல்லாரும் ஓசிடி மனநோயால் பாதிக்கப்பட்டவர்களா? என்று கேட்டோம்.

 ""நீங்கள் குறிப்பிட்ட அறிகுறிகளுடன் காணப்படுகிறவர்களுக்கு வந்த மனநோயை ஓசிடி என்று சொல்ல முடியாது. அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.'' என்ற அவர், ""சிலர் குடிக்கக் கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் குடியை விட முடியாது. சிலர் இனிமேல் சூதாட மாட்டேன் என்று நினைப்பார்கள். ஆனால் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். சிலர் பேருந்தில் பெண்களை இடிக்கக் கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் பேருந்தில் செல்லும்போது அவர்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாது. அதாவது அவர்களுடைய சிந்தனையின் மூலம் செயலைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு ஏற்படும் உந்துதல்களைத் தடுக்க முடியாது. இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் உள்ளவர்களை அப்ùஸஸிவ் கம்பல்ஸிவ் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறலாம்'' என்கிறார் புன்னகையுடன்.

 படம்: ராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com