ஆரோக்கியம்: விசிறியும் டாக்டர்தான்!

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. நான்கு நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கிடைத்த அரிய தகவல்களை வாசகர்களுக்காக ஒன்
ஆரோக்கியம்: விசிறியும் டாக்டர்தான்!
Published on
Updated on
2 min read

செ ன்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. நான்கு நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கிடைத்த அரிய தகவல்களை வாசகர்களுக்காக ஒன்றாகக் கோர்த்துள்ளோம்.

நீண்ட நாள் வாழ...

ஆரோக்கிய வாழ்க்கை வாழ காலையில் இஞ்சி, நடுப்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய். தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு சேர்க்க வேண்டும்.

 இயற்கை "ஹேர்-டை'

 செயற்கான முறையில் தலையில் வர்ணம் பூசிக் கொள்வது இப்போது நாகரிகமாகிவிட்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பாரபட்சமின்றி அனைவரும் தலைக்கு வர்ணம் அடிக்கத் தொடங்கிவிட்டனர். செயற்கையான சாயங்களைத் தலையில் பூசுவதால் அதில் கலந்துள்ள வேதிப் பொருள்கள் புற்று

 நோயைக் கூட உருவாக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இயற்கையிலேயே வர்ணம் பூசிக் கொள்ள அவுரி (நீல வண்ணம்), மருதாணி (ஆரஞ்சு), கரிசலாங்கண்ணி (கருப்பு) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இவற்றில் எந்த நிறம் வேண்டுமோ அதற்கான மூலிகையைத் தேர்வு செய்து அவற்றுடன் நெல்லிக்காய், செம்பருத்தி உள்ளிட்ட நமக்குத் தெரிந்த இயற்கையான மூலிகைகளைக் கலந்து "ஹேர்-டை' தயாரிக்கலாம். செலவும் மிச்சம், உடலுக்கும் ஆரோக்கியம், கூந்தலும் வலுப்பெறும்.

 விசிறியும் டாக்டர்தான்!

 மயில்தோகை விசிறி - அறிவை வளர்க்கும், தலை சுற்றல், வியர்வை, விக்கல், வயிற்று வலி நீங்கும்.

 வெட்டிவேர் விசிறி- தேக எரிச்சல், நீர் வேட்கை நீங்கும், மன ஊக்கத்தைக் கொடுக்கும்.

 பனை விசிறி- சுவையின்மையைப் போக்கும், வாத, பித்த, கப நோய்கள் நீங்கும்.

 வெற்றிலை போடத் தெரியுமா?

 முதலில் வெறும் வெற்றிலையை மென்ற பின்பு, அதனுடன் பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். வெற்றிலை சுவைத்த பின் ஊறும் நீர் குறித்த சுவாரசியமான தகவல்கள்:

 முதலில் சுரக்கும் நீர் - நஞ்சு

 இரண்டாவதாகச் சுரக்கும் நீர் - புத்தியைப் பேதலிக்கும்

 மூன்றாவதாகச் சுரக்கும் நீர் - அமிர்தம்

 நான்காவதாகச் சுரக்கும் நீர் - அதி இனிப்பு

 ஐந்தாவதாக, ஆறாவதாகச் சுரக்கும் நீர் - பயன்படாது

 அறுசுவை ரகசியம்!

 அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் அறுசுவைகளில் அடங்கியுள்ள ரகசியம் என்னென்ன?

 இனிப்பு - உடம்பை வளர்க்கும் (உருளைக்கிழங்கு)

 கார்ப்பு - செரிமானம் (மிளகாய், பூண்டு)

 உப்பு - நச்சுத்தன்மை போக்கும் (கல் உப்பு)

 புளிப்பு - வாயுத் தொல்லை நீங்கும் (நார்த்தங்காய்)

 கசப்பு - கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்டநோய்களைக் களையும் (பாகற்காய், வெந்தயம்)

 துவர்ப்பு - இரும்புச்சத்தை அதிகரிக்கும் (நாவல் பழம்)

 அறிந்த பொருள்கள்...  அறியாத பயன்கள்...

 மல்லிகை/ பிச்சி - துணியில் மல்லிகையைச் சுற்றி பிரசவித்த தாய்மார்களின் மார்பில் கட்டினால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

 பூவரசு - குளிர்ச்சியைத் தரும், தோல் நோய்களுக்கு அருமருந்து.

 மாதுளை - ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

 சப்போட்டா- ரத்தசோகைக்கு மருந்தாகும்.

 அன்னாசி - தேள்கடிக்கு மருந்து.

 பச்சை கலரு சிங்குசா...  மஞ்ச கலரு...

 நாம் அணியும் உடைகளின் வண்ணங்கள் நோய்கள் அதிகரிக்காமல் தடுக்கிறது.

 சிவப்பு - காய்ச்சல், நீர்க்கோவை

 கருப்பு - மந்தம், காய்ச்சல்

 பச்சை - உடல் சூடு நீங்கும், கண்களுக்குக் குளிர்ச்சி

 வெள்ளை - ஆயுள் விருத்தி, மகிழ்ச்சி, அறிவு, பலம் உண்டாகும்

 மஞ்சள் - வாத நீர் சுருக்கு, விஷக்காய்ச்சல், இருமல்

  எப்படித் தூங்க வேண்டும்?

 இரவு படுக்கும்போது இடதுபுறம் ஒருக்களித்து படுத்து, வலது காலை இடது காலின் மேல் மடக்கி வைத்து, இடது கையை தலைக்கு வைத்துப் படுக்க வேண்டும்.

 ஆரோக்கியமாக வாழ்வதற்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். பிறந்த குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வரை தூங்கும். குழந்தைகள் 14 வயதை எட்டும்போது அவர்களின் தூக்கம் படிப்படியாகக் குறைந்து 8 மணி நேரமாக மாற வேண்டும். பத்து மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களின் உடலில் கொழுப்பு சேர்ந்து இரத்த நாள அடைப்பு, தலைவலி, மயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

 எளிய மருந்துகள்!

 இன்சுலின் செடி - இதன் அறிவியல் பெயர் "காஸ்பஸ்'. தினமும் காலையில் ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். எல்லா வகை கால சூழ்நிலைக்கும் இந்தச் செடி ஏற்றதாக உள்ளது.

 மருள்செடி - "சான்செய்வெரியா' என்பது இதன் அறிவியல் பெயர். காதில் சேரும் மெழுகு, காது தொடர்பான நோய்களுக்கு இந்தச் செடியின் இலையை தீயில் சுட்டுப் பிழிந்து போட்டால் குணமாகும்.

 திரிபலா - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவில் உள்ள கலவைதான் திரிபலா. முடி உதிர்தல், உடலினுள் ரத்தக்கசிவு, பெண்களுக்கான வெள்ளைப்படுதல், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. இரும்புச் சத்தை அதிகரிக்கிறது. பல்வேறு நோய்களுக்கான மருந்துகளுடன், திரிபலா சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

 உடல் பருமன் குறைய- வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, பூசணிச் சாறு, கொள்ளு ரசம், துவையல்.

 - கண்காட்சியில் பல்வேறு உபயோகமுள்ள தகவல்கள் இடம் பெற்றிருந்தன. மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 ""மூலிகை உணவுகள் எப்போதும் கிடைக்க சிற்றுண்டி நிலையமும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற கண்காட்சிகளையும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.வீரபாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.