இது புதுசு: இணையத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கமம்!
""என்னுடைய பொண்ணு ஓவியம் வரைய ஆரம்பிச்சான்னா உலகத்தையே மறந்துடுவா... அவளை நல்ல ஆசிரியர்கிட்ட ஓவியம் கத்துக்க விடணும்...'' ""என்னுடைய பையன் கணக்கில் புலி. ஆனால் அவனுக்கு கெமிஸ்ட்ரி என்றாலே வேப்பங்காயா


""என்னுடைய பொண்ணு ஓவியம் வரைய ஆரம்பிச்சான்னா உலகத்தையே மறந்துடுவா... அவளை நல்ல ஆசிரியர்கிட்ட ஓவியம் கத்துக்க விடணும்...''
""என்னுடைய பையன் கணக்கில் புலி. ஆனால் அவனுக்கு கெமிஸ்ட்ரி என்றாலே வேப்பங்காயாய் கசக்கிறது. கெமிஸ்ட்ரிக்கு டியூஷன் வாத்தியாரை தேடிக்கிட்டே இருக்கேன்..''
""எம்பையன் இந்த வருஷம் பிளஸ் டூ முடிக்கப் போறான். வெளிநாட்டில் பட்டப் படிப்பை படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான். எந்தெந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் அவன் படிக்கவிரும்பும் படிப்புகள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். எப்படிப் பார்ப்பதுன்னுதான் தெரியல...?''
- இப்படி படிக்கும் பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும் பெற்றோர்களுக்கு உதவுகின்றது ஹ்ர்ந்ண்க்ஷன்.ஸ்ரீர்ம் என்னும் இணைய தளம். தகவல் பெறுவதில் ஏழை, பணக்காரன் என்னும் ஏற்றத்தாழ்வே இல்லாமல் செய்கிறது இந்த இலவச இணைய தளம். பிள்ளைகளின் படிப்பு, விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற பிற கலைகளை முறையாகப் பயில்வதற்கான பயிற்சி மையங்கள் பற்றிய விவரங்களையும் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் மையங்கள் உட்பட ஒவ்வொரு பெற்றோருக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இந்த யோகிபு இணைய தளம். இதன் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசினார் அதன் துணைத் தலைவர் கே.அசோக்.
""மூன்றரை வருடங்களுக்கு முன்னால் இந்த இணைய தளத்தை நிறுவியதற்கு பி.சந்திரசேகருக்கு ஒரேயொரு காரணம்தான் இருந்தது. அது, அவர் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த புதிதில் அவருடைய குழந்தையை தகுந்த இசைப் பள்ளியில் சேர்க்கச் சிரமப்பட்டதுதான். ஆனால் இன்றைக்கு "யோகிபு' இணைய தளம், சென்னையில் மட்டும் ஏறக்குறைய 236 பள்ளிகளையும் மும்பையில் 50 பள்ளிகளையும் பெங்களூருவில் 30 பள்ளிகளையும் அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் ஐந்து லட்சம் பெற்றோர்களையும் மாணவர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கின்றது!
யோகிபு இணைய தளத்தில் பள்ளிகள் முதற்கட்டமாக தங்களைப் பதிந்து கொள்ளவேண்டும். இதன் மூலம் மாணவர்களின் வருகை, பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகள், முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் செல்போன்களில் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். இதன்மூலம் மாணவர்களின் நடத்தைகள் பள்ளி வாயிலாக பெற்றோர்கள் "மானிட்டர்' செய்வதற்கு உதவுகிறோம்.
பள்ளியில் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளையும் எங்களின் இணைய தளத்தில் வெளியிடுகிறோம். இதுதவிர இசை, ஓவியம் போன்ற பிற கலைகளில் சிறப்பான மாணவர்களைப் பற்றிய செய்திகளையும், அவர்களின் கலை சார்ந்த ஒலி, ஒளித் தொகுப்புகளையும் வெளியிடுகிறோம். பெற்றோர்களைப் பற்றிய விவரங்களை ஒவ்வொரு பள்ளியிலிருந்தே நாங்கள் பெறுகிறோம். அல்லது ஒரு குழந்தையின் பெற்றோரும் இன்னொரு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோரை அறிமுகப்படுத்தலாம்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் பெற்றோர்களுக்கு கல்வியாளர்கள், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், உளவியல் அறிஞர்கள் ஆகியவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் பயிற்சி முகாம்களையும் சந்திப்புகளையும் எங்களின் யோகிபு இணைய தளத்தின் மூலமாக நடத்துகிறோம். சமீபத்தில் கூட, லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற உளவியலாளர் டாக்டர் ஜானகி, "அண்டர்ஸ்டான்டிங் யங் மைண்ட்ஸ்' என்னும் தலைப்பில் பெற்றோர்களின் முன் ஓர் உரை நிகழ்த்தினார்.
யோகிபு இணைய தளத்தின் மூலம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் பெற்றோர்களின் பிரச்னைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கும் இணையதளத்தில் வழி ஏற்படுத்தியிருக்கிறோம். அறிவியல், கலை.. என துறை சார்ந்த தங்களின் விருப்பத்தைத் தெரிவிக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், அது தொடர்பான புத்தகங்களை விமர்சனம் செய்வதற்கு அனுப்பிவைக்கிறோம்.
மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி முகாம்களையும் புதிர்ப் போட்டிகளையும் கோலப் போட்டி போன்ற பலவகையான போட்டிகளை நடத்தி படிப்பு தவிர மாணவர்களின் பல்வேறுவிதமான திறமைகளை வெளிக்கொணர்கிறோம்'' என்றார் அசோக்.
""இந்தோனேசிய மொழியில் "யோக்' என்றால் இணைத்தல் என்று பொருள். "ஹிபு' என்றால் அன்னை என்று அர்த்தம். "யோகிபு' என்றால் அன்னையரை இணைத்தல் என்று அர்த்தம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களையும் இணைக்கும் இணைய தளமாக யோகிபு தில்லி, அகமதாபாத் போன்ற நகரங்களிலும் இந்தாண்டு 500 பள்ளிகளுக்கு இணைய தளத்தில் இணையும் வாய்ப்பு உண்டாகியிருக்கின்றது'' என்றார் யோகிபுவின் நிறுவனரான சந்திரசேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...