கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அஞ்சறைப் பெட்டி

*  ஜாம் பதமாகிவிட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் ஜாமைப் போட்டால் கரையாமல் இருக்க வேண்டும். அதுபோல் தேக்கரண்டியில் இருந்து வடியும்போது, "ய' வடிவில் இறங்க வேண்டும்.

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:48 pm

கீதா ஹரிஹரன்

*  ஜாம் பதமாகிவிட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் ஜாமைப் போட்டால் கரையாமல் இருக்க வேண்டும். அதுபோல் தேக்கரண்டியில் இருந்து வடியும்போது, "ய' வடிவில் இறங்க வேண்டும்.

*  தோசைக்கல்லில் எண்ணெய் தேய்க்கும் கட்டையின் நுனியில் ஒரு அங்குல அளவில் சதுரமான வெள்ளைத் துணி கொண்டு கட்டிவிட்டால் எண்ணெய் சமமாக பரவும்.

*  மணத்தக்காளி வற்றல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியாக இருக்கும்.

*  தேன் குழலுக்கு அரைத்த மாவு மீந்துவிட்டால் அதைக் கரைத்து உப்பு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் பட்டு பட்டாக தோசை ருசியுடன் இருக்கும்.

*  கடையில் விற்கும் வெண்ணெய்கட்டி வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அவசரத் தேவைக்கு சிறிது மைதா மாவில் உப்புத்தூள், காரத்தூள் சேர்த்துக் கரைத்து வெண்ணைய் கட்டியை விருப்பமான வடிவத்தில் வெட்டி எண்ணெயில் பொறித்து எடுங்கள். வெண்ணெய்கட்டி பஜ்ஜி சுவையாகவும், புதுமையாகவும் இருக்கும்.

*  போளி தட்டும்போது பூரணத்தை உருட்டி வைத்த பின் அதை வடை போலத் தட்டையாகத் தட்டி வைத்தால் மாவால் மூடும்போது பூரணத்தின் மேல்புறமும், கீழ்ப்புறமும் மாவு சமமாக இருக்கும்.

*  தேங்காயும் பருப்பும் இல்லாமல் கூட்டு எப்படி செய்வது? ஒரு தம்ளர் பாலில் மூன்று ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், பொடித்த சீரகம் இவற்றைக் கலந்து காய்கறிகளில் கொட்டி ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி தாளித்துவிட்டால் போதும். தேங்காய் அரைத்த கூட்டு தோற்றுப் போகும்.

*  துவரம் பருப்பு வேக வைக்கும்போது பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது.

*  தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி அதில் முழு வாழைக்காயை 5 நிமிடம் போட்டு எடுத்துப் பிறகு "சிப்ஸý'க்கு சீவினால் தூள், துப்பட்டை விழாது. சீக்கிரம் மொறுமொறுக்கும்.

*  காய்ந்த பச்சைப் பட்டாணி அல்லது கொண்டைக் கடலை மூழ்கும் அளவிற்கு நீரூற்றி அடுப்பில் வைக்கவும். கடலையும் நீரும் சேர்ந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து அப்படியே பாத்திரத்தை மூடி வைக்கவும். அரை மணியில் சமைக்க கடலை ஊறிவிடும். வெகுநேரம் ஊற வைத்தால் வரும் ஊசல் வாடையும் வராது.

*  சப்பாத்தி மாவின்மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் மாவைப் போட்டு மூடி வைத்தால் மாவு 4 நாட்கள் வரை புதுசு போன்று இருக்கும்.

* 25 இல்லது 30 தட்டைக்கான உருண்டைகளை எடுத்து மனையின்மீது ஒரு எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் தாள் விரித்து, அதில் போதிய இடைவெளியில் உருண்டைகளை வைத்து அதே போன்று எண்ணெய் தடவிய மற்றொரு பிளாஸ்டிக் தாளால் மூடி ஒரு டப்பாவால் அழுத்த நிமிடத்தில் 25 அல்லது 30 தட்டைகள் ரெடி.

*  பச்சரிசியில் இட்லிக்கு ஊற வைக்கும்போது பச்சரிசியை சிறிது வெறும் வாணலியில் வறுத்து ஊற வைத்து அரைத்து இட்லி செய்து பாருங்கள். இட்லி மிருதுவாக இருப்பதுடன் நன்கு வெண்மையாகவும் இருக்கும்.

*  கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது அரிசி மாவு அல்லது ரவையில் உப்பு,காரம்,பெருங்காயம் அல்லது மசாலாத்தூளை கலந்து வைக்கவும். கிழங்கை வேக வைத்து அந்த ரவையில் நன்றாக கலந்து வைக்கவும். இதைக் கொஞ்சம் சமமான எண்ணெயில் மிதமான சூட்டில் வதக்கவும். இவ்விதம் அதிகப்படி எண்ணெயைத் தவிர்க்கலாம்.

*  தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்போது மாவின் அளவுக்கு தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு ஆட்டி தயிர் வடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

*  வடாம் போடுபவர்கள் வெயிலில் வைக்கக் கற்களை பாலீதின் பைகளில் போட்டு வைத்தால், கல்லிலுள்ள மண், தூசி வடாமில் விழாது.

* பழைய டயரியின் மேலட்டையை வட்ட வட்டமாக கத்தரித்து சூடான பாத்திரங்களை வைக்கும் "டேபிள் மேட்'டாக பயன்படுத்தலாம்.

*  பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளைப் பாத்திரத்தில் கவிழ்த்து மூடி வைத்தால், வெற்றிலை வாடாமல் இருக்கும்.

* சுவாமி படங்களை துடைக்கும் தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து துடைத்தால் படத்தை பூச்சி அரிக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.