

பெட்ரிகோ ஃபெலினி (1920-1993) இத்தாலிய கடற்கரை நகரமான ரிம்னியில் 1920-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் கன்யாஸ்திரீகள் நடத்திவந்த பள்ளி ஒன்றில் படித்தபோது, ஒருநாள் பள்ளியிலிருந்து ஓடிச்சென்று சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து மீண்டும் திரும்பிவந்தார்.
ஓவியத்தில் ஈடுபாடு கொண்ட இவர், கோடைக்காலங்களில் தன் கிராமத்திலிருந்து "ஜிப்சி காரவானில்' தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதுண்டு. ரிம்னி நகர ஓட்டல்களிலும் கடற்கரையிலும் தன் ஓவியத் திறமையை வெளிப்படுத்திய ஃபெலினி படிப்பை முடித்தவுடன் கேலிசித்திரப் பத்திரிகையொன்றில் வேலைக்கு அமர்ந்தார்.
கூடவே "லா அவெண்ட் ரோஸô' என்ற விஞ்ஞான பத்திரிகையொன்
றில் தொடர் ஒன்றையும் எழுதிவந்தார். 1939-ஆம் ஆண்டு ரோம் நகரில் சட்டக் கல்லூரியொன்றில் சேர்ந்தார். உள்ளூர் பத்திரிகை "பொப்லி டி ரோமாட' மற்றும் "சினிமாகசினோ' என்ற துணை பத்திரிகையிலும் எழுதத் தொடங்கினார். அத்துடன் "மார்கோ அரெலியோ' என்ற நகைச்சுவை பத்திரிகை உள்பட பல பத்திரிகைகளில் கார்ட்டூன்களையும் வரைந்து வந்தார்.
பத்திரிகைத் துறையில் எழுதிவந்த ஃபெலினிக்கு இரண்டாம் உலகப் போரின் போது அல்டோ பாப்ரிஸி என்ற நடிகருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த நட்பு திரையுலக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்தது. ஆரம்பத்தில் செஸவ் ஸவாட்டினியுடன் இணைந்து திரைக்கதை அமைத்த "அவன்டே ùஸ போஸ்ட்டோ', "கேம்ப்போ டிஃபிரேரி', "லா அல்டிமா கரோஸல்லா' போன்ற படங்களில் அல்டோ பாப்ரிஸி நடித்தார். 1943-ஆம் ஆண்டு ரேடியோ நகைச்சுவை நிகழ்ச்சியொன்றுக்காக "சிகோ இ பல்வினா' என்ற கதையை எழுதினார். இந்த நாடகத்தில் நடித்த இளம் நடிகை க்யூவெட்டா மஸினாவை எட்டு மாதங்கள் கழித்து ஃபெலினி திருமணம் செய்து கொண்டார்.
1944-ஆம் ஆண்டு நேச நாடுகள் இத்தாலியை விடுவித்த பின்னர் ஃபெலினி "ஃபன்னி ஃபேஸ் ஷாப்' ஒன்றை ரோம் நகரில் துவங்கி அமெரிக்க ராணுவ வீரர்கள் படங்களை வரைந்து கொடுத்து தாய்நாட்டிற்கு செல்ல உதவினார். இரண்டாம் உலகப் போர் முடிவடையும் நேரத்தில் ராபர்ட் ரோúஸôலிக்காக ஃபெலினி திரைக்கதையொன்றை எழுதினார். 1945-ஆம் ஆண்டு மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பாதிரியாரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டாக்குமென்ட்ரி படத்தைத் தயாரித்தவர் ரோம், "ஓபன் சிடி' (1945) "பைசா' (1946) "பிரான்சிசோ' (1950) "யூரோ 51' (1951) ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதினார்.
1950-ம் ஆண்டு ஆல்பர்ட்டோ லாட்டவ்டாவுடன் இணைந்து "வாடே வில்லிலைட்ஸ்' என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். இப்படத்தை தயாரித்த நிறுவனம் நடிகர்கள் உள்பட அனைவருக்குமே குறைந்த சம்பளமே கொடுத்தது. இது குறித்து ஃபெலினி சொன்னார் "வாடே லில்லி லைட்ஸ்' என்னுடைய முதல் படம். நானே திரைக்கதை எழுதி இயக்கினேன். இத்தாலியில் ஓராண்டு காலம் ஒரு கம்பெனியுடன் சுற்றியலைந்த அனுபவம்தான் அந்த கதை.''
1952-ஆம் ஆண்டில் திரையுலகில் போட்டோகிராஃபிக் காமிக் தொடர்கள் இடம்பெறத் தொடங்கியது. புதிதாக திருமணமான பெண்ணொருத்தி கணவனை விட்டுவிட்டு ஷேக்கை தேடி அலைவது போல் அமைத்த "தி ஒயிட்ஷேக்' நகைச்சுவை படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ""இது எதிர்பாராத பயணத்தின் வெற்றி அல்ல. பயணத்தின் ஒரு பகுதிதான் இது...'' என்று கூறிய ஃபெலினி இப்படத்தின் மூலம் பிரபல இசையமைப்பாளர் நினோ ரோட்டாவுடன் இணைந்திருந்தார்.
சிறுவயதில் தன் நண்பர்களுடன் ஆடி மகிழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து "ஐ விட்டோலனி லோஃபர்ஸ்' (1953), தரகர்கள் மூலம் நடைபெறும் திருமணங்களைப் பற்றி நையாண்டித்தனமாக "மேரேஜ் பீரோ' (1953), தனிமையில் வசிக்கும் இளைஞர்களின் மன ஓட்டத்தைப் பற்றி "லா ஸ்ராடா - தி ரோடு (1954), குடிசை வாழ் மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றும் கும்பலைப் பற்றி "தி ஸ்வென்டல்' (1955), விலைமகள்கள் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து "தி நைட்ஸ் ஆஃப் கேப்ரியா' (1957), ரோம் நகர உள் வாழ்க்கையை விளக்கும் "தி ஸ்வீட் லைஃப்' (1960) போன்ற படங்களை அடுத்தடுத்து தயாரித்து வெற்றி பெற்றார்.
அதுவரை கறுப்பு - வெள்ளை படங்களையே எடுத்தவர் முதன்முதலாக அனிதா எக்பர்க்கை வைத்து "தி டெம்ப்டேஷன்ஸ் ஆஃப் டாக்டர் அன்டோனியோ' (1962) படத்தை வண்ணத்தில் இயக்கினார். "திரைப்படங்களுக்கு வண்ணங்கள் புதிய பரிமாணத்தை கொடுக்கின்றன. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கின்றன' என்று கூறினார்.
சமூக சிந்தனையுடன் ஓவியன் ஒருவன் வெளி உலகத்தை அறிய முற்படுவதை "எய்ட் அண்ட் எ ஹாப்' (1963), சந்தேக குணம் கொண்ட கணவனிடம் வாழ்க்கை நடத்தும் பெண்ணைப்பற்றி "ஜூலியட் ஆஃப் தி ஸ்பிரிட்' (1965), எட்கர் ஆலன் போவின் "நெவர் பெட் தி டெவில் யுவர் ஹெட்' கதையைத் தழுவி "டோபி டேமிட்' (1968), முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமன் சாட்ரிஸ்ட் பெட்ரோனியûஸப்பற்றி ஃபெலினி சாட்ரிகான்' (1969), சர்க்கஸ் உலகத்தைப் பற்றி "தி க்ளெவுன்' (1970), பண்டைய ரோம் நகரத்தை அடிப்படையாக வைத்து "ரோமா', வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாக "அமர்காட் ஐ ரிமெம்பர்' (1973), ஒரு லைப்ரேரியன் அனுபவத்தை வைத்து "கேஸநோவா' (1976), இசைக் குழுவினரை அடிப்படையாக வைத்து "ஆர்க்கெஸ்ட்ரா ரிகர்சல்' (1978), நடுவழியில் நின்று போகும் ரயில் வண்டியில் பயணம் செய்யும் ஒரு பெண்ணின் அனுபவம் "தி சிடி ஆஃப் உமன்' (1980), அகதிகளாக செல்லும் கப்பலில் ஏற்படும் இன்னல்களை "அண்ட் தி ஷிப் செய்ல்ஸ் ஆன்' (1983), வயதான நடன பெண்களின் அனுபவங்களை விளக்கும் "இன் ஜிஞ்சர் அண்ட் ப்ரெட் (1985), படப்பிடிப்புகளின் போது நேர்ந்த அனுபவங்கள், பேட்டிகளை விளக்கும் "இன்டர்விஸ்டா இன்டர்வியூ' (1987), நாடுகளை பூகோள ரீதியிலோ சரித்திரச் சான்றுகளுடனோ அடையாளம் காட்ட "வாய்ஸஸ் ஆஃப் தி மூன்' போன்ற படங்களை தயாரித்து இயக்கிய ஃபெலினியின் படங்கள் அனைத்தும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தன. உலகத் தரம் வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்பட்ட ஃபெலினியின் திரைப்படங்கள் வளரும் கலைஞர்களுக்கு பாடமாகவே அமைந்துள்ளன. அதுமட்டுமல்ல..., ஃபெலினியன் பாதிப்பை பலவகையில் பட்டியலிட முடிவது அவருக்கு வெற்றிதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

27 நட்சத்திரங்களே படிகளாக...

”தில்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்!” டிடிவி தினகரன் பேட்டி
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

