ஹஸ்த சில்பா
தட்சிண கன்னடாவைச் சேர்ந்த விஜயநாத் ஷெனாய்க்கு பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்களை எழுப்பும்போது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கலைநயம் மிக்க பண்டைய கதவுகள், ஜன்னல்கள், உத்திரங்கள், தாழ்ப்பாள்கள் போன்ற


தட்சிண கன்னடாவைச் சேர்ந்த விஜயநாத் ஷெனாய்க்கு
பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்களை எழுப்பும்போது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கலைநயம் மிக்க பண்டைய கதவுகள், ஜன்னல்கள், உத்திரங்கள், தாழ்ப்பாள்கள் போன்றவற்றைச் சேகரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக சுற்றுப்புற நகரங்களில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் பழைய பொருள்களை விலைக்கு வாங்கி சேகரித்து வந்தார்.
வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பொருள்களையெல்லாம் வாங்கிக் குவித்தார்.
ஒரு வீட்டைக் கட்டுமளவுக்கு பொருள்கள் சேர்ந்தன.
ஒவ்வொன்றும் வரலாற்றை சொல்லுமளவுக்கு இருந்தன. சேகரிக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாப்பது ஒரு சவாலாக இருந்தது.
உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து இவற்றை அருங்காட்சியகமாக அமைக்க ஷெனாய் விரும்பினார். யாரும் ஒத்துழைப்புத் தர முன்வரவில்லை.
தட்சிண கன்னடா உதவி கமிஷனரிடம் உதவி கேட்டபோது, இவரது எதிர்கால திட்டங்களையும் கேட்டறிந்தார். உடனே உடுப்பி தாசில்தார் மூலமாக வறண்டிருந்த குளப்பகுதியை ஒதுக்கித் தந்தார்.
இவராகவே ஒரு வீட்டு பிளானைத் தயாரித்து நான்காண்டுகளில் கட்டி முடித்ததோடு அந்த இடத்திற்கு "ஹஸ்த சில்பா' என்று பெயரிட்டார். கூடவே ஹஸ்த சில்பா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒன்றையும் அமைத்து,
மியூசியம் ஒன்றையும் உருவாக்கினார். அதில் பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், புகைப்படங்கள் என வரலாற்று சின்னங்களைச் சேகரித்து
வைக்கத் தொடங்கினார். இலக்கிய கூட்டங்கள், கலாசார பரிவர்த்தனைகள் போன்றவற்றுக்கு இடம் அளித்தார்.
இதன்மூலம் கன்னட இலக்கியவாதிகள் இன்றும்
தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
வீட்டின் அமைப்பையும் கலாசாரப் பெருமைகளையும் காண மக்கள் வரத் தொடங்கினர். வெளிநாட்டினரும் வரும் சுற்றுலாத் தலமாக ஹஸ்த சில்பா உருவாயிற்று. பக்கத்திலேயே தன் குடும்பத்தினருடன்
ஒரு வீட்டை கட்டிக் கொண்டு குடியேறியுள்ள ஷெனாயை மணிப்பாலில் தெரியாதவர்களே இல்லை. மணிப்பால் பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டால் போதும். கொண்டு சென்று
விட்டுவிடுமளவிற்கு ஷெனாய் பிரபலமடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...