என் மகளுக்கு இரண்டு வயதாகிறது. பிறந்த 3 மாதத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. 17 நாட்களுக்குப் பிறகுதான் சரியானது. யூரின் இன்ஃபெக்ஷன் (சிறுநீர் தொற்று உபாதை) ஏற்பட்டதால்தான் காய்ச்சல் என்றனர். 1 1/2 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் காய்ச்சல். சிறுநீரில் உநஇஏஉதஐஇஏஐஅ இஞகஐ பாக்டீரியா ஒரு லட்சம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அடிக்கடி காய்ச்சல் வருகிறது. அவளுடைய உபாதை மாற ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
மனிதர்களுடைய குடல் பகுதி கதகதப்பான சூழ்நிலையில், கிருமி தொற்றை உடலின் உட்புறப் பகுதிகளில் பரவவிடாமல், அவ்விடத்திலேயே அழித்து வெளியேற்றிவிடுகிறது. இந்தக் கதகதப்பை ஏற்படுத்தித் தரும் பாசகபித்தம், தன் இருப்பிடமாகிய குடலின் மத்தியப் பகுதியிலேயே தங்கியிருந்து, உடல் தாதுக்களில் உள்ள வெதுவெதுப்பான சூழ்நிலையைப் பாதுகாக்கிறது. குடலின் மையப் பகுதி சில்லிட்டுவிட்டால், தாதுக்களில் பரவியுள்ள சூடானது, ஆவேசம் கொண்டு, உடல் சூடாகி, காய்ச்சலை உணர்த்துகிறது. இந்த ஆவேசமான நெருப்பானது, குடலை நோக்கிப்பயணித்து, அங்குள்ள சில்லிட்டநிலைக்குக் காரணமான ஒரு காரியத்தை அழிக்க முற்படுகிறது. அந்த வஸ்துவானது அழிந்து, பாசக பித்தத்தின் செயல்பாடு, மீண்டுவிடும் நிலையில், தாதுக்களில் அடங்கியுள்ள நெருப்பானது சாந்தமாகி, தம்முடைய தொழிலாகிய உணவின் சாராம்சத்தையும், சக்கையான மலப்பகுதியையும் பிரிக்கிறது. ஆக, பாசக பித்தமும், தாதுக்களில் பரவியுள்ள நெருப்பும் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு, மனிதர்களுடைய உயிரை, நோயற்றதன்மையுடன் ஆரோக்கியமான முறையில் நிலை நிறுத்தச் செய்கின்றன.
உங்களுடைய மகளுக்கு அநேகமாக இந்த பாசக பித்தம் - தாத்வக்னி எனும் பகுதிகளின் மந்தமான செயல்பாடுகளால்தான் சிறுநீரில் கிருமித் தொற்று உபாதை காணப்படுவதாகத் தென்படுகிறது. கீழ்க்காணும் சில உபாயங்களை நீங்கள் பயன்படுத்த, மகளுடைய குடல் கதகதப்பை முன்னேற்ற முயற்சி செய்யவும்.
தண்ணீரை நான்கில் ஒரு பங்கு அல்லது மூன்று பங்கு அல்லது அரை பாகம் குறையும்படி கொதிக்கச் செய்து, நுரையில்லாமல் சுத்தமான தாமிரப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாகப் பருகக் கொடுக்கவும். இதனால் விக்கல், வயிறு உப்புதல், நாவறட்சி, இருமல், மூச்சுத் திணறல், முற்றின ஜலதோஷம், பக்கச் சூலை, ஆமதோஷம் எனும் மப்புநிலை, கொழுப்பு, புதிய காய்ச்சல் போன்ற உபாதைகளைத் தவிர்த்துவிடலாம். இந்த நீர் பாசக பித்தத்தை நல்ல முறையில் வளர்க்கும். உணவைச் சீரணிக்கவும் செய்யும். தொண்டைக்கு நன்மையளிக்கும். சிறுநீர்ப் பையைத் தூய்மைப்படுத்தும்.
ஏலக்காய், கிராம்பு, ஓமம், சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை நன்றாகப் பொடித்து ஒரு மூடி போட்ட கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். குழந்தைக்கு இதன்மீது ஒரு பிரியம் ஏற்படும்படி செய்து, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பகலில், சிட்டிகை வாயில் போட்டுக் கொள்ளும்படி செய்துவிட்டால், குடல் மற்றும் தாதுக்களின் கதகதப்பைப் பாதுகாக்கலாம். சிறுநீர்த் தொற்று உபாதையும் குறைந்துவிடும்.
சிறுநீரைக் கழித்தவுடன், கை, கால் வாய்ப் பகுதிகளைத் தண்ணீரால் நன்றாகக் கழுவிக் கொள்ளும்படி பழக்கப்படுத்தவும். பெருமளவு சிறுநீர் உபாதைகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.
நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று பகையாதலால், குளிர்ந்த நீரையோ, பானத்தையோ குழந்தைக்கு நீங்கள் கொடுக்கவே கூடாது. ஏனென்றால் அது மூவகை தோஷங்களையும் அதிகரிக்கச் செய்யும்.
குடல் கதகதப்பையும், தாதுக்களில் பரவியுள்ள வெதுவெதுப்பையும் பாதுகாத்து, அதேசமயத்தில் சிறுநீரில் ஏற்பட்டுள்ள தொற்று உபாதையையும் குறைக்கச் செய்வதில் நன்னாரி வேர், வெட்டி வேர் போன்றவை சிறந்தவை. இவற்றை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் சாரிபாத்யாஸவம் மற்றும் உசீராஸவம் எனும் ஆயுர்வேத மருந்துகளைக் கலந்து 1 ஸ்பூன் (5 மிலி) காலை, மதியம், இரவு உணவுக்குப் பிறகு கொடுத்து வரவும்.
சுத்தமான இளநீர் கிடைத்தால், காலை உணவு செரித்து பசியுள்ள நிலையில், சிறிய அளவில் குழந்தைக்குக் குடிக்கக் கொடுக்கலாம். சிறுநீர்ப் பையைத் தூய்மைப்படுத்தும்.
உணவு வகைகளை நன்றாக வேக வைத்தே சாப்பிடக் கொடுக்கவும். சமைக்காத உணவின் வழியாக கிருமித் தொற்று குடலில் சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம். வேக வைத்த உணவையும் வெதுவெதுப்பாகச் சாப்பிடுவதே நலம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


