மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திசைமாறிய திரையுலகம்!

"பரதேசி' படத்தில் பிரசன்னா பாடிய "ஓர் மிருகம்' பாடல் செம ஹிட்டாகி அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததிருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட பக்திப் பாடல்களுக்கு ஆடியோ, வீடியோ சிடிகளை உருவாக்குவதில்தான் இவருக்குத் திருப்தி.

News image
Updated On :6 ஏப்ரல் 2013, 10:54 am

"பரதேசி' படத்தில் பிரசன்னா பாடிய "ஓர் மிருகம்' பாடல் செம ஹிட்டாகி அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததிருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட பக்திப் பாடல்களுக்கு ஆடியோ, வீடியோ சிடிகளை உருவாக்குவதில்தான் இவருக்குத் திருப்தி.

""இதற்கு முன்பு ஸ்ரீபுரந்தரா என்ற ஆடியோ, வீடியோ சிடிகளை இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்டேன். அது புரந்தரதாசரின் பாடல்களைக் கொண்டது. இப்போது "ஸ்ரீ ராகவேந்திரா' ஆடியோ, வீடியோ சிடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் பிரசன்னா.

""முன்பு நடிப்பதற்கு மறுத்துவந்த நீங்கள் இப்போது ஆர்வம் காட்டுகிறீர்களே?'' என்று கேட்டால், ""இப்போது திரையுலகின் நிலை மாறிவிட்டது. முதலில் திரைப்படத் துறையில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர் என்று இவர்கள் இன்ன வேலைகளை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றிருந்தது. ஆனால் இப்போது ஒருவருக்கு என்னவெல்லாம் திறமைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நிரூபித்துக்காட்ட சினிமா உலகில் முடிகிறது'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.