போலந்து நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஓப்லாட்கி என்ற பெயரில் வேஃபர்களைத் (ஒரு வகை பிஸ்கட்) தயாரிப்பார்கள். இதில் மத சம்பந்தமான காட்சிகளைப் பொறித்து மத குருமார்களின் ஆசிகளையும் பெறுவார்கள். இப்படித் தயாரித்த வேஃபர்களைப் பரிசுப் பொருள்களாக அனுப்புவார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் போலவும் இந்த வேபர்களை தயாரித்து அனுப்புவதுண்டு. கிறிஸ்துமஸýக்கு முதல் நாள் மாலை போலிஷ் குடும்பத்தினர் இந்த வேஃபர்களை வைத்துப் பிரார்த்தனை நடத்துவதும் உண்டு, கிறிஸ்துமஸ் இரவில் முதல் நட்சத்திரம் தோன்றியதும் இந்த ஓப்லாட்கி என்ற பட்சணத்தை (வேஃபர்) பிட்டு மற்றவருக்கு வழங்கி வாழ்த்துக் கூறி உண்டு மகிழ்வார்கள்.
* ஸெர்பியர்களின் கிறிஸ்துமஸ் கேக்குக்கு "செஸ்ட் நிஸ்டா' என்று பெயர். இந்தக் கேக்குகளைத் தயாரிக்கும் போது அதில் ஒரு வெள்ளிக்காசை ஏதாவது ஒரு கேக்கினுள் புதைத்துவிடுவார்கள். இந்த வெள்ளிக்காசு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
* கிறிஸ்துமஸ் புனித இரவின் முக்கியத்துவத்தைக் குறிக்க முதல் நாள் மாலையில் "ஸாலட்' பட்சணம் விசேஷமாகத் தயாரிப்பார்கள் மெக்சிக்கோ நாட்டினர். இதற்கு "என்ஸாலடாடா லா நோசேப்யூனா' என்று பெயர். ஏராளமான பழவகைப் பழங்கள், காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதில் வண்ண வண்ண மிட்டாய்களைக் கொண்டு அலங்கரித்திருப்பார்கள்.
* பின்லாந்தில் கிறிஸ்துமஸ்ஸூக்கு ஒரு வாரம் முன்பே வீட்டுத்தலைவி ஓட் தானியத்தைக் குத்திப் புடைத்து அரைத்து வைப்பதில் ஈடுபட்டிருப்பார்கள். அங்கு புனித ஸ்டீபன் நாள் தான் கிறிஸ்துமஸ் தினம். அன்று ஓட் கஞ்சி விசேஷ விருந்துப் பொருள். இதற்கு " ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் வே போரிட்ஜ்'என்று பெயர். பண்டைய மரபு மாறாமல் இன்றும் இதைத் தயாரிக்கிறார்கள்.
* டர்டே என்பது ஒரு விசேஷமான ரொட்டி அல்லது கேக். பல மடிப்புகளோடு கூடியதாக இருக்கும். குழந்தை இயேசுவை எப்படிப் பல மடிப்புக்களுடைய துணிக்குள் அன்னை மேரி வைத்து அரவணைத்தாளோ அந்த நினைவை இந்த வகை ரொட்டி நினைவுறுத்துவதாக ஐதிகம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது டர்டேக்களைத் தயாரித்து உண்டு மகிழ்பவர்கள் ருமேனியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


