தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

மன்னர் விருந்தில் வட்டமான கரிய பொருள்?

இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், ஒரு சமயம் இந்தியப் பிரதிநிதிகள் சிலருக்குப் பக்கிங்காம்

News image
Updated On :20 ஜூலை 2013, 4:14 pm IST

இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், ஒரு சமயம் இந்தியப் பிரதிநிதிகள் சிலருக்குப் பக்கிங்காம் அரண்மனையில் ஒரு விருந்து அளிக்க விருப்பம் கொண்டார். அதில் முக்கியமாக தென்னிந்திய உணவு வகைகளையே பரிமாற எண்ணங் கொண்டார்.

மன்னர் விருப்பத்தின் பேரில், தஞ்சாவூர் தலை வாழை இலை, கல்லிடைக்குறிச்சி அப்பளம், கேரளத்து நேந்திரம் பழம், ஆந்திரத்து ஆவக்காய் ஊறுகாய் என்று பலவும் விமானம் மூலம் லண்டனுக்கு வரவழைக்கப்பட்டன.

அரண்மனைச் சமையல் கலைஞர்களே எல்லாத் தென்னிந்திய உணவு வகைகளையும் தயாரித்தனர்.

உணவுகள் பரிமாறப்பட்டன. இலையில் உணவுகளுடன் வட்டமான கரிய பொருள் ஒன்றும் பரிமாறப்பட்டது. அது என்ன பொருள் என்று யாருக்கும்  புரியவில்லை. இந்தியப் பிரதிநிதிகள் அது சாப்பிடக் கூடிய பொருளா? இல்லையா? என்று தெரியாமல் மலைத்தனர்.

விருந்து முடிந்த பின்புதான் அதுபற்றித் தெரிய வந்தது. அப்பளத்தைப் பத்திரமாக அனுப்ப விரும்பியவர் ஓர் அப்பளத்தை வைத்து அதற்கு மேல் ஒரு வட்டமான எண்ணெய்க் காகிதத்தையும், அதன் மீது ஓர் அப்பளம் என்ற முறையில் அடுக்கி அனுப்பியிருந்தார்.  அப்பளம் பொரிப்பவர் அப்பளத்தை எறிந்துவிட்டு எண்ணைய்க் காகிதத்தை பொரித்துப் பரிமாறிவிட்டார். அதுதான் அந்தக் கரிய வட்டப் பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.