புள்ளிகள்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பற்றி அவருடைய மனைவியும் மகளும் என்ன சொல்கிறார்கள்?

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பற்றி அவருடைய மனைவியும் மகளும் என்ன சொல்கிறார்கள்?
மனைவி: ""எங்களுடைய 55 வருட மணவாழ்க்கையில் நானும் என் கணவரும் இதுவரை ஒருமுறை கூட சண்டை போட்டதில்லை. என் கணவர் இதுவரை எனக்கு ஒரு புடவை கூட வாங்கிக் கொடுத்ததில்லை. அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப ரொம்ப தூரம்''
மகள் ஷர்மிஷ்தா (கதக் நடன நிபுணர்) : ""என் அப்பா பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் அவர் ஒரு புத்தகப் புழு என்பதுதான்! தினமும் அவருடைய வேலைகள் முடிந்து அவர் வீட்டுக்கு வர இரவு ஒரு மணி கூட ஆகும். ஆனால் அதன் பின்னர் அவர் ஒரு மணி நேரம் புத்தகம் படிப்பார். நாவல், வங்காள கவிதைகள், பொருளாதாரம், வரலாறு எல்லாம் படிப்பார்.
குடும்பம் பற்றி ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்வார். மூத்த பெண் என்ற உரிமையில் நான் மட்டுமே அவருடன் விவாதம் செய்வேன். அவருடன் விவாதம் செய்து வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல!
கணவன்மார்கள் சமையலறைக்குள் நுழையக் கூடாது என்ற பழமையான கொள்கை உடையவர். ஒரு தம்ளர் தண்ணீர் வேண்டும் என்றால் கூட அவருக்கு அம்மாதான் எடுத்துக் கொடுக்க வேண்டும். அடிப்படையில் அவர் ஓர் எளிமையான மனிதர்''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

