ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாறாத வழக்கங்கள்

கிறிஸ்தவர்களுடைய முக்கிய பண்டிகைகளான கிறிஸ்துமஸூம், ஈஸ்டரும் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிலவிய பழக்க வழக்கங்களை ஒட்டியே

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:46 pm

தங்க. சங்கரபாண்டியன்

கிறிஸ்தவர்களுடைய முக்கிய பண்டிகைகளான கிறிஸ்துமஸூம், ஈஸ்டரும் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிலவிய பழக்க வழக்கங்களை ஒட்டியே கொண்டாடப்படுகின்றன.

÷கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25-ஆம் நாள் என்று 4-ஆம் நூற்றாண்டில்தான் நிர்ணயிக்கப்பட்டது.

÷சிலை வணக்கம் செய்வோர் தங்கள் திருவிழாக்களைக் கொண்டாடத் தொடங்கும் காலம் இது. அவர்கள் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுளுக்குப் பூஜை செய்ய நிர்ணயித்த நாளிலேயே உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

÷கிறிஸ்தவ மதத்தில் புதிதாகச் சேர்ந்தவர்கள் தங்கள் பழைய பழக்க வழக்கங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. எனவே அவர்களைத் திருப்திப்படுத்த மதத் தலைவர்கள் அவர்களுடைய சடங்குகளையும் ஏற்றுக் கொண்டனர்.

÷9-ஆம் நூற்றாண்டு வரை டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படவில்லை. நடுமாரிக் காலத் திருவிழாவாகத்தான் இருந்தது.

÷டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்குப் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதும் கிறிஸ்துவுக்கு முன் இருந்த வழக்கம்தான்.

÷நார்மன்கள் 1066-இல் இங்கிலாந்து மீது படையெடுத்து வந்தபோது, தங்கள் பழக்க வழக்கங்கள் பலவற்றைக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுத்தினர். கரோல் நடனம், கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியவை அப்படி வந்தவைதான். காகிதத் தொப்பி அணிவது, பட்டாசு வெடிப்பது போன்றவை பண்டைய ரோமானியர்கள் வழக்கம்.

÷முட்டை உயிரின் ஜீவ வித்து, புனர்ஜென்மத்தின் அடையாளம் என்று பண்டைய மக்கள் கருதினார்கள். அதுவே ஈஸ்டர் முட்டை என முக்கியத்துவம் பெற்றது. மதம் மாறினாலும் மனிதனின் வழக்கங்கள் மாறவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

காந்திஜி உருவம் பொறித்த தபால் தலையை முதன் முதலில் வெளியிட்டது அமெரிக்காதான்.

உ. ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.