டிப்ஸ்..!
மெழுகுவர்த்தி ஏற்றும்போது அகல் விளக்கில் நிறுத்தியபடி ஏற்றி வையுங்கள். தரையோ, ஜன்னலோ வீணாகாது.


* காலியான டூத் பேஸ்ட் மூடிகளின் அடிப்பக்கம் லேசாகப் பெவிகால் தடவி ஜன்னல் ஓரத்திலோ அல்லது சுவரிலோ பொருத்திவிட்டு, அதன் மீது அதிக எடை இல்லாத சாவி, பைகள் போன்றவற்றைத் தொங்க விடலாம்.
* மெழுகுவர்த்தி ஏற்றும்போது அகல் விளக்கில் நிறுத்தியபடி ஏற்றி வையுங்கள். தரையோ, ஜன்னலோ வீணாகாது.
* முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகிலுள்ள ஸ்டேண்ட் ஒன்றில் காந்தம் ஒன்றைப் பொருத்தி அதில் பின்கள், ஹேர் பின்கள் ஒட்ட வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
* பாத்திரம் தேய்க்க வாங்கும் லிக்குவிட் சோப் பிளாஸ்டிக் கண்டெயினரை (வாய்ப்பாகம் ஸ்ட்ராவுடன் கூடியது) நன்கு சுத்தப்படுத்திக் காய வைத்து எண்ணெய் நிரப்பி வைத்துக் கொண்டால், விளக்குகளுக்கு எண்ணெய் விடும்போது கீழே சிந்தி பிசுபிசுக்காது.
* வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஃப்ளஷ் டேங்கின் உள்ளே தண்ணீரில் மூழ்குமாறு தேய்ந்த சோப்புத் துண்டுகளைப் அடியில் துளையுள்ள சோப்புப் பெட்டியில் வைத்துக் கட்டித் தொங்கவிட்டால் டாய்லெட் பளிச். நறுமணமும் பாத்ரூம் முழுவதும்.
* டிவியின் மீது எக்காரணம் கொண்டும் தண்ணீர் படக்கூடாது. உள்ளே போய்விட்டால் மின்சாரம் தாக்கி பிக்சர் டியூப் வெடிக்கும் அபாயம் உண்டு.
* கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை ஓர் எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை புதிதாகவே இருக்கும்.
* பழைய நாலு முழ வேஷ்டியில் நாலைந்து பைகள் தைத்து வைத்துக் கொள்ளுங்கள். தானியங்களை முளை கட்ட, திரிந்த பாலை வடிய வைத்து பனீர் செய்ய, உபயோகப்படும்.
* சுண்ணாம்பில் சிறிது தேங்காய்த் தண்ணீர் விட்டு வைத்தால் இறுகிப் போகாமல் எப்போதும் இளகிய பதத்திலேயே உபயோகிக்க ஏதுவாக இருக்கும்.
* புடவைக்கு கஞ்சி போடும்போது கொடியில் உலரப் போடுவதைவிட, தரையில் விரித்துக் காய வைப்பது சிறந்தது. ஏனெனில் நாமே அயர்ன் செய்யும்போது சுலபமாக இருக்கும்.
* டிஷ்யூ பேப்பர் நாப்கின்களைப் போட்டுக் கண்ணாடிக் கதவுகளைத் துடைத்தால் பளீரென்று இருக்கும். குறிப்பாக மழை நேரங்களில் கார் ஓட்டும்போது நன்கு துடைக்க உதவும்.
* மொசைக் தரையில் கோலம் போடும்போது, அரைத்த மாவில் சிறிது பெவிகால் பசையைச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். இதனால் பல நாட்களுக்கு அழியாமல் பளபளப்பாகவே கோலம் இருக்கும்.
* உபயோகிக்கப்படாத புதிய தபால் தலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு விட்டனவா? அவற்றைச் சில நிமிடங்கள் நீங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுலபமாக, கிழியாமல் பிரிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...