உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் இப்போது காபி, டீயில் இனிப்புக்காக அதிகம் உபயோகப்படுத்துவது "சுகர்ஃப்ரீ'. இதற்கு முன் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது சாக்ரின். சாக்ரின், சிறுநீர்ப்பையில் புற்றுநோயை உண்டாக்கும் என்று சொல்லப்பட்டதால், அந்த இடத்தை இந்த "சுகர் ஃப்ரீ' பிடித்துவிட்டது. இதன் வேதியியல் பெயர் அஸ்பார்டேம்.
"அஸ்பார்டேம், சாக்ரினைவிடக் கெடுதலானது' என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள் சொன்னபோதும், லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளால் அக்கருத்து ஓரங்கட்டப்பட்டு, தங்கள் மாற்று விளம்பரத்தால் இதை வேரூன்றச் செய்து விட்டார்கள்.
1971-இல் "ஸியர்லி' என்ற மருந்து நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் சிலேட்டர், ஒருமுறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, கை தவறுதலாக அருகிலிருந்த ஒரு மருந்துப் பொடியைச் சுவைத்து விட்டார். சீனியைவிட 500 மடங்கு இனிப்புத் தன்மை கொண்ட அந்தப் பொடிதான் அஸ்பார்டேம் சுகர்ஃப்ரீ. 1974-இல் அமெரிக்காவின் எப்.டி.ஏ. (ஊர்ர்க் ஹய்க் ஈழ்ன்ஞ் அக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய்) இந்தப் பொருளை வியாபாரத்துக்கு அனுமதியளித்தது.
இப்பொருள் மனிதரின் பயன்பாட்டுக்கு வந்தபின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல பேராசிரியர் டாக்டர் ஓல்னி, அஸ்பார்டேமுக்கு எதிராக தனிமனிதப் போராட்டத்தை நடத்தினார். அஸ்பார்டேம் உட்கொண்ட எலிகளுக்கு மூளையில் புற்றுநோய் வருவதை நிரூபித்து குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்தையும் முன்வைத்தார். அதைக் கண்டு எப்.டி.ஏ. அஸ்பார்டேமுக்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்தது. சுகர்ஃப்ரீ வியாபாரத்தினால் பெரும் பண மழையில் நனைந்த வியாபார நிறுவனம் ஒன்று, அஸ்பார்டேம் சுகர்ஃப்ரீ மிகவும் பாதுகாப்பானது என 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது. அந்த நிறுவனம் வெளியிட்ட அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளெல்லாம் ""ஜோடிக்கப்பட்ட பொய்கள்'' எனவும் வாதிட்டார் ஓல்னி. இதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஸ்கின்னர், விசாரணைக் கமிஷன் அமைக்காமல் இழுத்தடித்தார்.
1984-இல் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரீகன் ஜனாதிபதியாக ஆனார். தனது நெருங்கிய நண்பர் "ஹேஸ்' என்பவரை எப்.டி.ஏ. தலைவராக நியமித்தார். நியமித்த சூட்டோடு அஸ்பார்டேமுக்கு மீண்டும் வியாபார அங்கீகாரம் வழங்கினார். அடுத்த ஆண்டே பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அஸ்பார்டேம் தயாரிக்கும் நிறுவனத்தில் அவரும் பணியில் சேர்ந்துவிட்டார். இப்படியே அந்த நிறுவனம் ஆபத்தான அஸ்பார்டேம் வியாபாரத்தில் பண அருவியை தடங்கலின்றிக் கொட்ட வைத்துப் பெருக்கியது.
முன்பு சாக்ரினை உற்பத்தி செய்த மான்சான்டோ நிறுவனமே 1885-இல் "ஸியர்லி' நிறுவனத்தை வாங்கியது. பிரபல பூச்சிக்கொல்லி மருந்தாக உலகெங்கும் உபயோகப்பட்டு, தற்போது இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் தடைசெய்துவிட்ட டி.டி.டீ மருந்தை உற்பத்தி செய்பவர்கள் இந்த நிறுவனம்தான். மீதி கால் பங்கு அஸ்பார்டேமை உற்பத்தி செய்பவர்கள் யார் தெரியுமா? அஜினோமோட்டோ!
உலகெங்கும் உள்ள சமையலறைகளைக் கெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் அஜினோமோட்டோவைத் தயாரிக்கும் கம்பெனிதான் அந்த நிறுவனம். உடல் நலத்தைக் கெடுக்கும் "மோனோசோடியம் குளுடாமேட்' என்கிற வேதிப்பொருள் கலந்ததுதான் அஜினோமோட்டோ. உலகில் எப்படி சுதந்திரமாக இந்தப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களின் உயிர்களோடு விளையாடுகின்றன பார்த்தீர்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

இனி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் : ஆதவ் அர்ஜுனா

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

