நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நேருவின் நூலுக்குத் திருத்தம் சொன்ன வினோபா

ஜவஹர்லால் நேருவின் "பாரத தரிசனம்' என்ற நூலில், அவர் ராமாயணத்தை இந்தியில் எழுதிய துளசிதாசர் அக்பரின்

News image
Updated On :15 ஜூன் 2014, 3:51 am

பூதலூர் முத்து

ஜவஹர்லால் நேருவின் "பாரத தரிசனம்' என்ற நூலில், அவர் ராமாயணத்தை இந்தியில் எழுதிய துளசிதாசர் அக்பரின் காலத்தில் வாழ்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சமயம் வினோபாஜி நேருவைச் சந்தித்தார். ""இப்படி எழுதியது பொருந்தாது'' என்றார். ""ஏன்?'' என்று நேரு கேட்டார்.

உடனே வினோபாஜி ""இதை உங்களுக்கு விளக்குகிறேன்'' என்று சொல்லிவிட்டு நேருவின் வீட்டிலிருந்த முஸ்லிம் காவல்காரர் ஒருவரைக் கூப்பிட்டு "" உங்களுக்கு அக்பர் என்றால்  யார் என்று தெரியுமா?'' என்று கேட்டார்.

அந்த காவல்காரர் தலையைச் சொரிந்து கொண்டே  ""அக்பரா! எனக்குத் தெரியாதே. நான் பிரார்த்தனையில் "" அல்லாஹு அக்பர் ( கடவுள்தான் பெரியவர்) என்று ஓதும்போது அக்பர் என்ற சொல்லை உச்சரிக்கிறேன்'' என்று சொன்னார்.

அடுத்து வினோபா "" உங்களுக்குத் துளசிதாசரைத் தெரியுமா? '' என்று கேட்டார். அதற்கு அந்த முஸ்லிம் ""தெரியுமே, ராமாயணம் எழுதியவர். எங்கள் கிராமத்தில் எல்லோரும் ராமாயணம் ஓதுகிறார்களே''! என்றார்.

வினோபாஜி நேருவைப் பார்த்து இப்போது புரிந்ததா? நாடாளும் மன்னர்களை யாரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. கடவுளின் புகழைப் பாடுபவர்களின் பெயரே எல்லா மதத்தினருக்கும் தெரிந்திருக்கிறது.

உங்கள் நூலின் அடுத்த பதிப்பு வெளியிடும்போது ""அக்பரின் காலத்தில் துளசிதாசர்'' என்று எழுதாதீர்கள்.

"" ராமாயணம் எழுதிய துளசிதாசர் காலத்தில் அக்பர் என்ற ஒரு மன்னரும் வாழ்ந்தார்'' என்று எழுதுங்கள் என்று கூறினார்.

"தேசீய காவியம் ராமாயணம்' என்ற நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.