யார் என்ன ஆடை உடுத்தலாம்!
பண்டிகை காலம் நெருங்குகிறது என்றாலே ஒவ்வொரு வீடுகளிலும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை


பண்டிகை காலம் நெருங்குகிறது என்றாலே ஒவ்வொரு வீடுகளிலும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் தொற்றிக் கொள்ளும். ஆடைகள் வாங்குவது, நகைகள் வாங்குவது, பலகாரங்கள் செய்வது என்று பரபரப்பாக இருப்பார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது ஆடைகளே. அதிலும் ஆண்களை விட பெண்களே விதவிதமான ஆடைகள் வாங்குவதை மிகவும் விரும்புவார்கள். காரணம் இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தாம். தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையைத் தேர்வு செய்து அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகாக தெரியலாம். யார் எந்த ஆடையை அணியலாம் என்று பார்ப்போமா...
ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைப்பாடுகள் அல்லது மணி, சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும்.
ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து விட வேண்டும்.
பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டி ஷர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.
ஒல்லியாகவும், உயரமாகவும் கலராகவும் இருக்கும் பெண்கள் கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் எடுப்பாகத் தெரிவீர்கள்.
கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். அதுபோல் முடியைக் கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது கழுத்தில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.
ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கறுப்பு அல்லது மாநிறமாக இருக்கும் பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளைத் தேர்வு செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவது போல் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். இப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுúஸா, துப்பட்டாவோ அணியலாம்.
குள்ளமாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக் கூடாது. அப்படியே அணிய நேர்ந்தால், அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.
குள்ளமாகவும் சற்று நிறம் குறைவாக இருப்பவர்களும் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது. மிகவும் டார்க் நிற ஆடைகளை கறுப்பு நிறம் கொண்டவர்கள் அணியக் கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளைத் தேர்வு செய்து அணியலாம். இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளி இல்லாமல் இருப்பதும் போன்ற சேலைகளைத் தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.
குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவோர் ஆடையையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள். சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் குண்டான பெண்களும் அழகாகத் தெரிவார்கள்.
சிறிது இறுக்கமில்லாத கோடு போட்ட ஆடைகளை அணியலாம்.
பருமன் ஆனவர்களுக்கு டியுனிக் ஒரு சிறந்த மேலாடையாகும். ஆனால் டியுனிக் ஆடைகள் கழுத்துப் பகுதியில் சற்று இறுக்கமாக இருந்து பின் கீழே இறுக்கமில்லாமல் இருக்கும். எனவே அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
பருமனான கைகள் இருந்தால் கையில்லாத அல்லது இறுக்கமான கையுள்ள மேலாடைகளை அணியக்கூடாது. ஆனால் பப் ஸ்லீவ்ஸ் உள்ள மேலாடைகள் பருமனான கைகளை மறைத்துவிடும். எனவே பப் ஸ்லீவ்ஸ் உள்ள குர்தாஸ், டியுனிக் மற்றும் ரவிக்கைகள் அணியும் போது மிக ஸ்டைலாகத் தெரியும்.
இப்பொழுது இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் லேகின்ஸ்தான் பேஷனாக இருக்கின்றன. தடிமனான பெண்கள் அவற்றை அணிந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் அவர்கள் லேட்டஸ்ட் பேஷன் ஆடைகள் அணிய முடியாது. ஆனால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் பூட் கட் ஜீன்ஸ்களை அணியலாம்.
புடவைகள் எல்லா வகையான பெண்களுக்கும் அம்சமாக இருக்கும். அதற்காக பருமனான பெண்கள் ஷிபான் அல்லது ஜார்ஜெட் புடவைகளை அணியக் கூடாது. மாறாக காட்டன் மற்றும் பாரம்பரிய பட்டுப் புடவைகளை அணிந்தால் மிக எடுப்பாக இருக்கும்.
மொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிங்கான ஆடையைத் தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், நீங்களும் பார்ப்பவர்களைப் பொறாமை கொள்ள செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...