

ஒரு நாடு, ஒரே நாளில் ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரம் கோடிகளுக்குச் சொந்தமாகி உலகின் பெரும் பணக்கார நாடு பட்டியலில் இடம் பெற முடியுமா?
கொலம்பியா நாட்டிற்கு அப்படியோர் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஆம்... 308 ஆண்டுகளுக்கு முன் 11 மில்லியன் தங்க நாணயங்கள், பல கோடிகள் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், நவரத்தினங்களுடன் மூழ்கடிக்கப்பட்ட ஸ்பானியக் கப்பலைக் கொலம்பியா சென்ற மாதக் கடைசியில் கடலில் கண்டு பிடித்திருக்கிறது.
இந்த பொக்கிஷத்தின் இன்றைய மதிப்பு 17,000 மில்லியன் டாலர்கள். அதாவது 1,12,200 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது .
அன்று கொலம்பியா ஸ்பெயின் ஆட்சியின் கீழிருந்தது. 308 ஆண்டுகளுக்கு முன், தென் அமெரிக்காவிலிருந்து சேகரிக்கப்பட்ட தங்கம், நவரத்தினக் குவியலுடன் கொலம்பியாவிலிருந்து ஸ்பெயின் நாடு நோக்கி 1708ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி புறப்பட்ட ஸôன் ஜோஸ் கப்பல், பிரிட்டிஷ் கடல் படையால் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. ஸôன் ஜோஸ் மூன்று தட்டுள்ள பெரிய வணிகக் கப்பலாகும். பொக்கிஷத்துடன் உடைந்து சிதறிய ஸôன் ஜோஸ் கப்பலை கொலம்பியா கடலின் அடித்தளத்தில் கண்டுபிடித்திருக்கிறோம் என்று டிசம்பர் 4 இல் அறிவித்தார்கள். இந்த கப்பல் கொலம்பியாவின் கர்ட்டஜீனா கடல் பகுதியில் சுமார் 1000 அடி ஆழத்தில் கிடக்கிறதாம்.
கொலம்பியா கடல் பகுதியில் இவ்வாறு ஸôன் ஜோஸ் மாதிரியான 1000 கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றனவாம். அமெரிக்காவின் பிளாரிடா கடல் பகுதியில் மூழ்கிய கப்பல்களின் சிதைந்த பாகங்கள், தங்கம், வெள்ளி நாணயங்களைத் தேடுவதை பலர் தொழிலாகவும், பொழுது போக்காகவும் கொண்டுள்ளனர். அவ்வப்போது கிடைக்கும் தங்கக் காசுகள், கப்பலின் முக்கிய பாகங்கள் நல்ல வருவாய் தருவதால் பலரின் கவனம் ஸôன் ஜோஸ் பக்கம் இருந்து வந்தது. ஸôன் ஜோஸ் சுமந்து வந்த பொக்கிஷங்களின் மதிப்பு மிக அதிகம் என்பதால் நூறு ஆண்டுகளாக கடல் படுகையில் ஸôன் ஜோசைப் பலரும் தேடி வந்தனர்.
தற்சமயம் கொலம்பியாவால் அனுப்பப்பட்ட ஆய்வுக் குழுவினர், நவம்பர் - 27 இல் மிக நவீனக் கருவிகளின் உதவியால் ஸôன் ஜோசில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகளைப் படம் பிடித்து அடையாளம் கண்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கடல் நீரால் அரிக்கப் படாத பித்தளை பீரங்கிகளில் பொறிக்கப்பட்டிருக்கும் டால்பின் உருவம், அது ஸôன் ஜோஸ் கப்பலின் ஓர் அடையாளம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக கடலில் பொக்கிஷங்களைக் கண்டு பிடிப்பவர்களுக்கு ஐம்பது சதவீதப் பங்கு தரப்படும். கடல் சட்ட அமைப்பில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளாக ஸôன் ஜோசைத் தேடும் படலம் தொடங்கப்பட்டாலும், 1982இல் தான் அமெரிக்க நிறுவனம் (நங்ஹ நங்ஹழ்ஸ்ரீட் அழ்ம்ஹக்ஹ (நநஅ), ஸôன் ஜோசின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் கண்டுபிடித்ததற்கான ஆதாரங்களைத் தரவில்லை. இந்த அறிவிப்பு வந்த இரண்டாம் ஆண்டில், கடலிலிருந்து பொக்கிஷம் கண்டுபிடிப்பவர்களுக்கு ஐந்து சதவீதப் பங்கு மட்டுமே தரப்படும் என்று கொலம்பியா, சட்ட திருத்தம் செய்தது. இதனால் நநஅ-க்கு கொலம்பியா மீது எக்கச்சக்க கோபம். பிறகு அது வழக்காக மாறி, நநஅ நஷ்ட ஈடு கேட்க... கடைசியில், 2011இல் ஸôன் ஜோஸ் தொடர்பான உரிமை கொலம்பியாவுக்கே என்று தீர்ப்பானது.
கொலம்பியாவின் ஜனாதிபதி ஜான் மானுவேல் சண்டோஸ், ஸôன் ஜோஸ் மூழ்கியுள்ள இடம் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளார்.
ஸôன் ஜோஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனுள் இருக்கும் பொக்கிஷங்களை எடுத்து கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்குமாம். இந்த பொக்கிஷத்திற்கு உரிமை கொண்டாடி ஸ்பெயினும் களத்தில் குதிக்கிறது. காரணம், அந்த பொக்கிஷம் ஸ்பெயின் நாட்டிற்காக ஸ்பெயின் கப்பலில் சேகரித்து அனுப்பப்பட்டது. எங்கள் சொத்து எங்களுக்குத்தான் என்கிறது ஸ்பெயின். சற்றும் தளராமல் மீண்டும் வழக்குத் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலம்பியாவின் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.