புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரசிகர்களுக்காகவே நடிக்கிறேன்: அமிதாப் பச்சன்

இதுவரை நான் நடித்திராத பாத்திரங்களாக பார்த்து இயக்குநர்கள் என்னை நடிக்க வைப்பதாக  கூறுவதில் எந்த வித உண்மையும்

News image
Updated On :1 பிப்ரவரி 2015, 5:31 am

பூா்ணிமா

""இதுவரை நான் நடித்திராத பாத்திரங்களாக பார்த்து இயக்குநர்கள் என்னை நடிக்க வைப்பதாக  கூறுவதில் எந்த வித உண்மையும் இல்லை. என்னுடைய வயதுக்கு இளவயது கதாநாயகனாக நடிக்க முடியாது. அதனால்தான் என்னுடைய வயதுக்கேற்ற பாத்திரங்களை உருவாக்கும் போது என்னுடைய நினைள வந்து கூப்பிடுகிறார்கள். முதலாவது நான் இன்னும் தேவை என்பதாகளம் இருக்கலாம்  என்பதே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. இரண்டாவது அவர்களது எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கையாகளம் இருக்கலாம். இப்படிப்பட்ட சமயங்களில் அவர்கள் அழைப்பைத் தவிர்க்க முடியாமல்,  நேரத்தை ஒதுக்க வேண்டியதாகிறது.

இதற்கு என்னுடைய ரசிகர்களும் காரணமென்று சொல்லலாம். சில நேரங்களில் இவர்கள் எதற்காக என் மீது இத்தனை அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றும். இதற்கு நான் கடளளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ரசிகர்கள் அனைவரையுமே என்னுடைய குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறேன்.

பால்கியின் முந்தைய படங்களை "சீனிகாம்' மற்றும்  "பா'வில் நடித்ததை விட இந்த முறை அவரது " ஷமிதாப்' பில் நடிப்பது முற்றிலும் வித்தியாசமாகவே உள்ளது. இந்த படத்தின் வசனம் முழுவதையும் நடிக்கும் போதே பேச வைத்து பதிள செய்தார் பால்கி. "" இது என்ன புதுமையாக இருக்கிறதே'' என்று கேட்டேன்''

 ""சொன்னதை மட்டும் செய்யுங்கள் '' என்றார். படம் முடிந்ததும் மீண்டுமொருமுறை  டப்பிங் பேசினோம். இதுவரை நான் இப்படி நடித்ததே இல்லை.

இந்தப் படத்தில் என்னுடன் தனுஷ், அக்ஷராஹாசன் ஆகியோருடன் ரேகாளம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மையில் நானும் ரேகாளம் சேர்ந்தாற்போல் வரும் காட்சிகள் ஏதும் இல்லை, படத்தைப் பார்க்கும் போதுதான் காட்சிகள் அமைப்பு  உங்களுக்குத் தெரியும். இதனால் ரேகாளடன் நான் சேர்ந்து  நடிக்க விரும்பவில்லையோ என்று கருத வேண்டாம். எங்கள் இருவருக்கும் பொருந்தும் வகையில் திரைக்கதை அமைத்து நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

நடிப்புத் தொழிலில் உங்களால் எப்படி தொடர்ந்து அக்கறையுடன் நடிக்க முடிகிறதென்று பலரும் என்னை கேட்பதுண்டு. தொழில் என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் அதற்கான ஆர்வமும் இருக்க வேண்டும், உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால் ஒப்புக் கொள்ளக் கூடாது. ஒப்புக் கொண்ட வேலை உங்களுடைய மனதை முழுமையாக ஆக்ரமிக்க வேண்டும். எந்தவொரு பாத்திரமானாலும் நான் ஏற்று நடிப்பதற்கு என்னுடைய ரசிகர்கள் தான் காரணம். அவர்களை ஏமாற்றுவது சரியல்ல.

இன்றைய இளைய சமூகத்தினருக்கு வழிவிட வேண்டுமென்பதை பெரியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய பெரியோர்கள் எப்படி நம்முடைய வாழ்க்கையுடன்  இணைந்து வந்தார்களோ அதேபோன்று நாமும் இன்றைய தலைமுறையினருடன் இணைந்து செல்ல வேண்டும். அவர்களைப் போல் வேகமாக ஓடவோ, நடக்கவோ வித்தியாசமாக நினைப்பதோ கூடாது. நல்லவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கென்று பெரியவர்கள் சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். அதற்கு நான் மதிப்பளிக்க தவறியதில்லை. அவர்கள் கற்று தந்த பாடங்கள்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளதாகவே கருதுகிறேன்.

நம்முடைய அடுத்த தலைமுறை இந்த நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுவதுண்டு.  நானும் ஜெயாளம் எங்களது கருத்துக்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிப்பதில்லை, இன்றைய தலைமுறையினர் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கும் தங்களுடைய சுதந்திர சிந்தனைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர்களே சீர்தூக்கிப் பார்க்கட்டும் என்று நாங்களாகவே விலகியுள்ளோம். இதை எங்கள் பிள்ளைகள் மட்டுமின்றி பேரக் குழந்தைகளும் புரிந்து கொண்டதோடு எங்களை ஏமாற்றவில்லை என்பதும் எங்களுக்கு  சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எங்கள் பேரக்குழந்தைகள் நவ்யா நவேலி, அகஸ்த்யா, ஆராத்யா நிறை வேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஐஸ்வர்யாவின் குழந்தை ஆராத்யாவைப் பொறுத்தவரை தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? எங்கே போகிறோம்? என்பதை உணராமல் பெற்றோர்களுடன் பயணத்திலேயே அவளது நேரம் சென்று கொண்டிருக்கிறது. அவள் வளரும்போது நான் அவளது நம்பிக்கைக்குரிய நண்பனாகளம் பாதுகாவலனாகளம் இருப்பேன். ஐஸ்வர்யா மீண்டும் நடிக்க வருவது குறித்து நானோ ஜெயாவோ முடிள செய்ய முடியாது. இது முழுக்க முழுக்க அவரது சொந்த விஷயமாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.