மன்னரின் இரு பக்கத்திலும் சிங்கங்கள்!
நட்வர்சிங் எழுதி வெளியான "ONE LIFE IS NOT ENOUGH' என்னும் நூலில் பல சுவையான இதுவரை வெளிவராத தகவல்கள்.


நட்வர்சிங் எழுதி வெளியான "ONE LIFE IS NOT ENOUGH' என்னும் நூலில் பல சுவையான இதுவரை வெளிவராத தகவல்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் சீனியர் கேம்பிரிட்ஜ் என்று ஒரு பரீட்சை இருந்தது. அதற்கான கேள்வித்தாள்கள் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வரும். அதற்கான விடைத்தாள்களும் கப்பலில்தான் அனுப்பப்படும்.
அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது அவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருந்தாராம். சித்தார்த்த சங்கர் ரேதான் அதற்கு குறுக்கே நின்றாராம்.
நட்வர்சிங் எத்தியோப்பிய தூதரகத்தில் பணிபுரிவதற்கான உத்திரவை அந்நாட்டு மன்னரிடம் கொண்டு சென்றபோது மன்னரின் இரண்டு பக்கத்திலும் சிங்கங்கள் இருந்தனவாம். உடலில் ஒரே நடுக்கம் என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் உத்திரவை மன்னரிடம் கொடுத்துவிட்டு அவசரம் அவசரமாக வெளியேறினாராம்.
அரபு நாட்டு மன்னர் ஒருவர் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா வந்தபோது அவரோடு வந்தபெண்கள் குழுவினர் வழியில் சந்தித்த பிச்சைக்காரர்களுக்கு தங்கக் காசை கொடுத்தார்களாம். இது சரியல்ல என்று மன்னரிடம் எடுத்துக் கூறியபோது " யார், யார்? என்று பெயர்ப் பட்டியல் கொடுங்கள்?' அவர்கள் தலையை தட்டில் வைத்து கொடுக்கிறேன் என்றாராம்.
எட்டாவது கூட்டுத் சேரா மாநாட்டில் பாலஸ்தீனத் தலைவர் அராபத் ஈரானைப் பற்றி சற்று கடுமையாகப் பேசிவிட்டார். "இதற்கு பதில் கூறும் உரிமை தங்களுக்கு உள்ளது. எனவே தாங்கள் பேச அனுமதிக்க வேண்டும் என்று ஈரானிய பிரதிநிதி அயோதுல்லா கொமேனி கேட்டாராம். அப்படி இடம் கொடுத்தால் சிக்கலாகிவிடும் என்பதால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, கொமேனியிடம் "" நான் இந்தியாவின் பிரதமராக அல்ல. ஈரானிடம் நட்பு கொண்ட நண்பராகக் கேட்கிறேன். தயள செய்து அராபத்துக்கு பதிலளிக்கும் உரிமையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.'' என்று கேட்டுக் கொண்டாராம்.
அதற்கு கொமேனி ""இந்தியப் பிரதமரே வந்து என்னிடம் இப்படிக் கேட்கும்போது எப்படி மறுக்கமுடியும்?'' என்று ஒப்புக்கொண்டாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...