நெல்சன் மண்டேலாவின் காதல் வாழ்க்கை
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது அவருடன் கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை கோரும் போராட்டங்களில்


மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது அவருடன் கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகிம் அஸ்வத்.
இவரது மகள் ஆமினா. தென்னாப்பிரிக்காவில் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாகப் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தவர்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்த யூசப் கச்சாலியா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஆமினா புதுதில்லியில் வாழ்ந்து வந்தார். அவரின் கணவர் 1995-ஆம் ஆண்டு காலமானார். அதன் பின்னர் ஜோகன்னஸ்பர்க் வந்த ஆமினா கச்சாலியா தம் 83-ஆவது வயதில் 31.1.2014 அன்று காலமானார்.
அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் அவர் எழுதிய "வென் ஹோப் அண்ட் ஹிஸ்டரி ரைம்' ""நம்பிக்கையும் வரலாறும் இணைந்து கவிதையாகும்போது'' என்னும் புத்தகத்தை வெளியிட்டனர்.
இந்நூலில் நெல்சன் மண்டேலாவைக் குறித்து ஆமினா கச்சாலியா சுவையான செய்திகளைப் பதிவு செய்துள்ளார். அந்தப் புத்தகத்தில் ஆமினா இவ்வாறு எழுதி உள்ளார்: ""ஒருமுறை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள என் வீட்டிற்கு வந்த நெல்சன் மண்டேலா என்னை முத்தமிட்டு என் தலைமுடியைக் கோதிவிட்டபடி, "நீ எவ்வளவு அழகான இளநங்கை தெரியுமா?'' என்று கேட்டார். நான் கோபமாக அவரைத் தள்ளிவிட்டேன். என் கோபத்துக்கான காரணம் என்னவென்று அவர் கேட்டார். ""நான் இளநங்கை அல்லள் நடுத்தர வயதுப் பெண்'' என்று பதில் சொன்னேன்.
அவர் மீண்டும் ஒருமுறை என்னை முத்தமிட்டு "நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா வயதான பெண்ணே?' என்று என்னைக் கேலி செய்தார். மீண்டும் ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது அவருக்குப் பிடித்தமான மீன் குழம்பு சமைத்து வைத்திருந்தேன். அன்றுதான் என்னைக் காதலிப்பதாகவும் அவர் என்னிடம் கூறி என் சம்மதத்தைக் கேட்டார்.
இதற்கு மறுத்த நான் மொசாம்பியா நாட்டைச் சேர்ந்த கிரேசா மேச்சலுடன் அவர் திருமணம் செய்ததை நினைவுபடுத்தினேன். உடனடியாக அவர் புறப்பட்டு விட்டார். மீன் குழம்பைப் பற்றி நினைவுபடுத்தியும் நிற்காமல் சென்றுவிட்டார்.
மண்டேலாவுக்கு ரொமான்ஸ் சரியாக வரவில்லை. காரணம் அவர் சிறையில் இருந்த காலத்தில் அந்தக் கலையை அவர் இழந்திருந்தார். சிறையில் அவர் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் நல்ல ரொமான்டிக்கான நபராக அவர் திகழ்ந்திருப்பார்'' என ஆமினா கச்சாலியா அந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...