அகில இந்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு!
மாணவர்களுக்கிடைய ஓவியப்போட்டி நடத்துகிறது. இதில் "ஏ' பிரிவில் 4,5,6 வகுப்பு மாணவர்களுக்கான போட்டியும், "பி' பிரிவில் 7,8,9 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியும்


மாணவர்களுக்கிடைய ஓவியப்போட்டி நடத்துகிறது. இதில் "ஏ' பிரிவில் 4,5,6 வகுப்பு மாணவர்களுக்கான போட்டியும், "பி' பிரிவில் 7,8,9 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது. இரண்டு பிரிவுகளுக்கும் தலா 3 தலைப்புகள் தரப்படும். மின்சார சேமிப்பு மற்றும் தூய்மை , பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து புதுமையான விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வதுடன் இதுகுறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்துவதே இந்த ஓவியப்போட்டியின் நோக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சென்னை சின்மயா பள்ளி மாணவன் அ.யோகரன் முதல் பரிசு வென்றுள்ளார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""நான் எல்.கே.ஜி., யு.கே.ஜி படிக்கும்போது, அந்த வயசுலேயே படத்தைவிட்டு வெளிவராதபடி அழகாக வண்ணம் தீட்டுவேனாம். அதைப் பார்த்துவிட்டுதான் அம்மா என்னை முதல் வகுப்பு படிக்கும்போதே ஓவியப் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார்களாம். ராஜேந்திரன் மாஸ்டர் என்பவர் எனக்கு ஓவியங்களை எப்படி வரைய வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு எங்கு ஓவியப்போட்டி நடந்தாலும் அதில் கலந்து கொண்டு பரிசு பெறுவேன்.
பல ஓவியப்போட்டிகளில் கலந்து பரிசுகளை வென்றதால், அதன் பிறகு எங்கு போட்டிக்குச் சென்றாலும் என்னை நன்கு அடையாளம் கண்டுகொண்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் கோப்பையாக வாங்கி அடிக்கவைப்பது போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. அதன்பிறகு நல்ல அங்கீகாரம் உள்ள ஓவியப் போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள ஆரம்பித்தேன். அப்போதுதான் அரசாங்கம் இந்தியா முழுவதும், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியை பள்ளிகளில் அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கிட்டதட்ட 25,000 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள். அதில் இருந்து 50 ஓவியங்களை தேர்ந்துதெடுத்து அதிலிருந்து முதல் மூன்றைத் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். இதுபோல் மற்ற மாநிலங்களில் இருந்து தேர்வானவர்களுக்கு டெல்லியில் மீண்டும் தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடக்கும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் கிடைக்கும். அதில் கடந்த ஆண்டு 2-ஆம் பரிசான ரூ.50,000 வென்றேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஓவியப்போட்டியில் ஒன்பதாம் வகுப்புவரை உள்ள மாணவ, மாணவியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். நான் ஒன்பதாம் வகுப்பு படிப்பதால் இந்த ஆண்டு மட்டும்தான் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். அதனால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியோடு முயற்சி செய்தேன். அதுபோலவே முதல் பரிசு ஒரு லட்சம் வென்று உள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
படம்: யு.கே.ரவி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...