பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் ஆங்கிலம், கணிதப் பாடம் கஷ்டமாக உள்ளது எனக் கூறுவதுண்டு. ஆனால் விருது
நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியான பி.பத்மபிரியா, ஆங்கில மொழிப்போட்டியில், உலக அளவில் எட்டாம் இடம் பிடித்திருக்கிறார்.
இது குறித்து பத்மபிரியாவிடம் கேட்டபோது:
""கேரளா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் "வேர்ட்ஸ் ஒர்த் இன்டர்னேஷனல் ஸ்பெல்லிங் பி' என்ற நிறுவனம் ஆண்டுதோறும் ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருகிறது.
அந்த நிறுவனம் முதலாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை ஆங்கில மொழித்திறனை வளர்க்க புத்தகங்களை வழங்கி வருகிறது.
பின்னர் அந்த புத்தகங்களைப் படித்த மாணவர்களுக்கிடையே வகுப்பு வாரியாகப் போட்டிகளை நடத்துகிறது.
முதலில் பள்ளி அளவிலும், பின்னர் மண்டல அளவிலும், தேசிய அளவிலும், இறுதியாக உலக அளவிலும் போட்டிகளை நடத்துகிறது.
எங்களது பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆங்கில மொழித்திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். மண்டல அளவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரையில் 2014 ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நான் வெற்றி பெற்றேன்.
தொடர்ந்து தேசிய அளவில் கோழிக்கோட்டில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றேன். இதில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் 2014 அக்டோபர் மாதம் சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான போட்டியில் நான் கலந்து கொண்டு 60 மதிப்பெண்கள் பெற்று எட்டாமிடம் பெற்றேன். இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் 60 பேர் கலந்து கொண்டனர்.
இதில் ஆங்கில சொல்திறன், சொற்களுக்கான எழுத்துக்களை சொல்லும் திறன், உச்சரிப்புத்திறன், பேச்சுத்திறன், சொற்களைப் பயன்படுத்தும் திறன், பேசும் போது சரியாக ஒலி எழுப்பும் திறன், கோடிட்ட இடங்களை நிரப்புதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் நான் குறிப்பிட்ட இடத்தைப் பெறுவேன் என நினைத்தேன். ஆனால் உலக அளவில் எட்டாமிடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்கள் எந்த ஒரு மொழியையும் ஆர்வத்துடன் படித்தால் வெற்றி பெறலாம் என்பது எனது கருத்தாகும். எதிர்காலத்தில் நான் மருத்துவராக விரும்புகிறேன்'' என்றார் பத்மபிரியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


