அண்ணா சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் நின்றார். அனல் பறக்கும் பிரச்சாரம்.
மூதறிஞர் இராஜாஜி தலைமையில் ஒரு பொதுக் கூட்டம். சர். ஏ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் பேச அண்ணா அதைத் தமிழில் மொழி பெயர்க்கிறார்.
கூட்டத் தலைமையேற்ற இராஜாஜி கடைசியில் பேசுகிறார். ""இது நியாயம் இல்லை. இப்படியா செய்வது?'' ஒரு பக்கம் திருவாவடுதுறை நாதசுரக் கச்சேரியும் மறுபுறம் காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதசுரக் கச்சேரியும் வைத்தால் எதை முழுமையாக ரசிக்க முடியும்? நான் மாட்டிக் கொண்டு விழிக்கிறேன்.
இராமசாமி முதலியாரின் ஆங்கில அழகையா? அண்ணாவின் தமிழ் இனிமையையா? எதை நான் ரசிக்க? திண்டாடிப் போய்விட்டேன். இவர்கள் எப்படித்தான் இப்படிப் பேசக் கற்றார்களோ?''
பாராட்டுவதைக் கூடக் கலையழகோடு பாராட்டிய ராஜாஜியின் அழகுப் பேச்சையும் கேட்ட மக்கள் மூன்று கச்சேரி கேட்ட நிறைவோடு சென்றனர்.
"சொன்னார்கள்... சொன்னார்கள்'' என்ற நூலிலிருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 17,258 கோடி லாபம் ஈட்டிய ஹெச்பிசிஎல்!!

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

