சத்தியம்... இது சத்தியம்

வருடப் பிறப்பன்று கைராசிக்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பணம் வாங்குவதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டிருந்த நடிகர், தயாரிப்பாளர், நண்பர் கே.பாலாஜி தவறாமல் அவரிடம் வருவார்.
சத்தியம்... இது சத்தியம்
Updated on
1 min read

வருடப் பிறப்பன்று கைராசிக்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பணம் வாங்குவதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டிருந்த நடிகர், தயாரிப்பாளர், நண்பர் கே.பாலாஜி தவறாமல் அவரிடம் வருவார்.

எம்.ஜி.ஆர் அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, வேடிக்கையாக இப்படிக் கூறுவதை பல முறை நான் கேட்டிருக்கிறேன். ""படம் எடுக்கிறதென்னமோ தம்பியை வச்சி, பணம் வாங்குகிறது மட்டும் அண்ணன்கிட்டேயா? வாழ்க!''

பணத்தைப் பெற்றுக்கொண்ட பாலாஜி சிரித்துக்கொண்டே நழுவி விடுவார். "உங்களையும் வைத்து ஒரு படம் எடுப்பேன்' என்று தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டார். ஏனென்றால் ""எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்க மாட்டேன்'' என்று பாலாஜி சிவாஜியிடமும் "சிவாஜியை வைத்துப் படம் பண்ண மாட்டேன்'' என்று தேவரண்ணன் எம்.ஜி.ஆரிடமும் ஏற்கெனவே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

சிவாஜியை வைத்துத் தொடர்ந்து ப - பா வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏ.பீம்சிங்கும் - "எம்.ஜி.ஆரை வைத்துப் படம் பண்ண மாட்டேன்' என்று சிவாஜியின் கையிலடித்துச் சத்தியம் பண்ணியவர் ஆவார்!

(ஆரூர்தாஸ் எழுதிய "எம்.ஜி.ஆர் - சிவாஜி என் இரு கண்கள்' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com