அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நோட்டாவுக்கான மவுசு மக்களிடையே குறையவில்லை. ஆனால், 2026ஆம் ஆண்டு தேர்தலில் நோட்டா என்ன செய்யக் காத்திருக்கிறது என்று தெரியவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், அடுத்த இடத்தில் இருந்த வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 656 மட்டுமே. ஆனால், அங்கு நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 2,247 ஆகும்.
அதுபோல தி.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜே. கருணாநிதி வெற்றி பெற்றார். ஆனால், இரண்டாம் இடம் டிபத்த வேட்பாளரை விட வெறும் 137 வாக்குகள்தான் அதிகம் பெற்று ஜே. கருணாநிதி தனது வெற்றியை பதிவு செய்திருந்தார். ஆனால், இதே தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டும் 1617 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தைவிட இது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிரண்டு தொகுதிகளில் இல்லை, கிட்டத்தட்ட 12 தொகுதிகளில் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்திருந்தன. அதில், தி.நகர், மேட்டூரைத் தொடர்ந்து தென்காசி, நெய்வேலி, ராசிபுரம், மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம், ஜோலார்பேட்டை, காட்பாடி தொகுதிகளும் அடக்கம்.
இத்தனை வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்ததற்கு, தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் மீதான மக்களின் அதிருப்தியே என்று கூறப்பட்டது.
வேட்பாளர்கள் மீது மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த நோட்டாவுக்கான வாக்குகள் விழுகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு நோட்டா அறிமுகமானபோது, வாக்களர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்துதான் மக்கள் நோட்டாவுக்கு பதிலாக ஏதேனும் ஒரு சுயேச்சைக்காவது தங்களது வாக்குகளை செலுத்திவிடலாமே என்று மாறத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது 2016ஆம் ஆண்டு நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டபோது மட்டும் அதற்கு ஒட்டுமொத்தமாக விழுந்த வாக்குகள் 5.63 லட்சம். சராசரியாக எடுத்துக் கொண்டால் ஒரு தொகுதிக்கு 2,400 வாக்குகள் நோட்டாவுக்கு மட்டும் விழுந்துள்ளன. ஆனால் இந்த சராசரி கடந்த 2021ல் குறைந்துவிட்டது. 1,500 ஆக மாறியிருந்தது.
ஆனால், 2026 தேர்தலில் நோட்டா பெரிய வித்தைகள் எதையும் காட்டாமல் போகலாம். ஆனால், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நினைத்து வீட்டில் இருக்காமல், நமது வாக்கினை நாமே செலுத்திவிடலாம் என்று நினைப்பவர்களுக்கான ஒரு வாய்ப்பாக எப்போதும் நோட்டா இருக்கிறது.
வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் கடைசி இடத்தில் நோட்டா இடம்பெற்றிருந்தாலும்கூட, சில சுயேச்சை வேட்பாளர்களைவிடவும் அதிக வாக்குகளைப் பெறும் வாய்ப்பு நோட்டாவுக்கு எப்போதுமே இருக்கிறது.
நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என்பது போன்ற அதிகாரங்கள் நோட்டாவுக்குக் கிடைத்தால் மட்டுமே, அதற்கு மக்களிடையே மீண்டும் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளுக்கும், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழும் தொகுதிகளுக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை என்றும் தரவுகள் கூறுகின்றன.
தேர்தல் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தவே மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கிறார்கள். பொதுவான அதிருப்தியின் வெளிப்பாடாகவே நோட்டா இருக்கிறது இத்தனை காலமும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?
2 தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்!

அதிமுக தவறு செய்கிறது: டாக்டர் கே.கிருஷ்ணசாமி சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


