மசால் தோசை 40 பைசா... ஃபில்டர் காஃபி 15 பைசா!
மும்பையில் கிழக்கு மட்டுங்கா பகுதியில் இருக்கும் கிங்ஸ் சர்க்கிள் என்ற இடத்தில் உள்ளது தென்னிந்திய உணவகம் "கஃபே மெட்ராஸ்'. சமீபத்தில் ஒருநாள், ஏழு மணிக்கு ஓட்டல் திறந்தவுடன், அங்கே சாப்பிடச் சென்றவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.










