நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரசகுல்லா யாருக்குச் சொந்தம்?

ரசகுல்லாவுக்கு "பெங்கால் ஸ்வீட்' என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2018, 5:12 am

ராஜி

ரசகுல்லாவுக்கு "பெங்கால் ஸ்வீட்' என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது. உண்மையில் ரசகுல்லா வங்காளத்துக்கு சொந்தம் தானா? 
""இல்லை. உண்மையில் ரசகுல்லா எங்கள் உணவு'' என்று ஒடிசாக்காரர்கள் கூறுகிறார்கள். இதன் காரணம் புதிரானது.
ஒரு காலத்தில் ஒடிசா வங்காளத்துடன் இணைந்திருந்தது. அப்போது ஒடிசாவின் முதன்மொழியே பெங்காலிதான். ஆனால் ஒடிசா பிரிந்த பிறகு இந்த நிலை மாறியது. மாநிலத்தின் முதன்மை மொழியாக ஒடிசா மாற்றப்பட்டது. இருந்தாலும் வங்காளம் - ஒடிசா உறவு தொடர்கிறது. புரியில் ஜகந்நாதரை தரிசிக்கச் சென்றால் அங்கு ஒடிசாக்காரர்களை விட கூடுதலாக வங்காளியரைத்தான் காண முடியும்.
அது மட்டுமல்ல...கொல்கத்தா மற்றும் வங்காளத்தில் மிகப்பெரிய மனிதர்கள் வீடுகளில் சமையலுக்கு ஒடிசா பிராமண சமையல்காரர்கள் தான் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அறிமுகப்படுத்திய ரசகுல்லா தான் இன்று பெங்கால் இனிப்பு என பெருமைப் பேசப்படுகிறது. ஆக, உண்மையில் ரசகுல்லா ஒடிசாவுக்கே சொந்தம் என்று கூறி வருகிறது ஒடிசா.
ஒடிசா தனி மாநிலம் ஆகிவிட்டாலும் இன்றும் ஒடிசாவின் கட்டக் நகர் செல்லும் வங்காளத்தவர்கள், அங்கு தன்னை ஒடியாக்காரர் போலவும், வங்காளத்தின் மித்னாபூரில் நுழைந்து விட்டால், வங்காளிகளாகவும் காட்டிக் கொள்வது உண்டு. மித்னாவூர் என்ற இடம் வங்காள - ஒடிசா எல்லையில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.