""இன்னிக்கு ராத்திரி கட்டின புடவையோட வீட்டை விட்டு வெளியே வா. நாம ஓடிப்போயிடலாம்னு என் காதலிகிட்டே சொன்னேன். அதுக்கு அவள் வரமுடியாதுன்னுட்டாள்''
""ஏன்?''
""ராத்திரியிலே அவள் நைட்டி அணியுறதுதான் வழக்கமாம்''
எஸ்.ரமேஷ், ஆவடி.
""பக்கத்து வீட்டுக்காரன் பரம எதிரின்னு ஏன் சொல்றீங்க?''
""நான் "நாய்கள் ஜாக்கிரதை'ன்னு போர்டு வெச்சா எதிர்வீட்டுக்காரன் "அந்த வீட்டுல நாயே இல்லை'ன்னு போர்டு வைக்கிறான்''
""மன்னர் போருக்குப் படைகளை அனுப்புறதுக்குப் பதிலா அந்தப்புர அழகிகளை அனுப்புறாரே... ஏன்?''
""எதிரி நாட்டு மன்னர் சபலப் பேர்வழியாம்''
""என்னடி செருப்புக்குக் கீழே ஹெட்போன் ஒயரை எடுத்துச் சொருகுறே?''
""நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க் செருப்புடீ இது''
அ.செல்வகுமார், சென்னை-19.
"" இவர் ஒரு பிரபல ஜோக் எழுத்தாளர்''
""அப்படியா? நிறைய ஜோக்ஸ் எழுதுவாரா?''
""அதெல்லாம் ஒண்ணும் இல்லை. பிரபலமான ஜோக் ஒண்ணே ஒண்ணு எழுதியிருக்கிறார்''
வி.ரேவதி, தஞ்சை.
""உங்க வீட்டுக்குப் பாம்பு வந்ததா சொன்னீயே... அப்புறம் என்ன செஞ்சே?''
"" பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்''
""வீட்டுல பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய ஏன்டா அடிச்சீங்க?''
கே.ஆர்.ஜெயக்கண்ணன், கவற்குளம் தேரிவிளை.
""ஏன்டி பிச்சைக்காரனை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு சாப்பாடு போடுறே?''
""சத்தமாப் பேசாதீங்க. தீபாவளி செலவுக்கு கைமாத்து தர்றேன்னு சொல்லியிருக்கார்''
எ.எல்.சண்முகம், கண்டனூர்.
""நீங்க ஏன் பாதி சிகரெட் குடிக்கிறீங்க?''
"" சிகரெட் குடிக்கிறதை பாதியா குறைச்சிக்கன்னு டாக்டர் சொன்னாரு. அதான்''
பி.கவிதா, சிதம்பரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
மோகன்லால் - 366 படத்தின் பெயர் அறிவிப்பு!

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


