மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பேல்பூரி

""ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்ததுல உனக்கு நெஞ்செரிச்சல் சரியாயிடுச்சு.  என்க்கு வயித்தெரிச்சலா இருக்கு''""அப்ப டாக்டர் கிட்டே காட்டிட வேண்டியதுதானே?''

News image
Updated On :22 அக்டோபர் 2018, 9:28 am

கேட்டது

(நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை வாசலில் கணவனும் மனைவியும்)

""ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்ததுல உனக்கு நெஞ்செரிச்சல் சரியாயிடுச்சு.  என்க்கு வயித்தெரிச்சலா இருக்கு''
""அப்ப டாக்டர் கிட்டே காட்டிட வேண்டியதுதானே?''
""எனக்கு வயித்தெரிச்சலே டாக்டர் பில்லைப் பார்த்துத்தானே?''

கே.ஆர்.ஜெயக்கண்ணன், 
கவற்குளம் தேரிவிளை.

(வேலூர் அல்லாபுரம் தேநீர்க் கடையில் இருவர்)

""ஏன்டா சோகமாயிருக்கே?''
""குடும்பத்துல சொத்தெல்லாம் பிரிச்சாச்சு''
""உனக்கு வெயிட்டா கிடைச்சிருக்கும்ல. அப்புறம் என்ன சோகம்?''
""நீ வேறடா... அசையாச் சொத்தான வீடு, நிலம் எல்லாம் எங்கண்ணன் எடுத்துக்கிட்டு அசையும் சொத்தான அப்பா, அம்மாவை என் தலையில கட்டிட்டார்''

வெ.ராம்குமார்,  வேலூர்-1.

கண்டது

(புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் உள்ள தேநீர் கடையின் பெயர்)

ஊசி காபி பார்

ஏ.எம்.ஷெரீப், புதுக்கோட்டை. 

(மண்ணச்சநல்லூரில் முதல் மாடியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பலகையில்)

படியேறி வந்தால்
பணத்தை மிச்சப்படுத்தலாம்.

ஆர்.தனம், திருச்சி- 2

(வேலூர்- காஞ்சிபுரம் சாலையில் ஓர் உணவகத்தின் பெயர்)

வாங்க பரிமாறுகிறோம்

கி.பழநி, வேலூர்-9



(பொள்ளாச்சியில் கலைமகள் ராமசாமி சாலையில்  ஒரு காரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

ஐ ஹம் ம்ஹழ்ழ்ண்ங்க்
ஈர் ய்ர்ற் க்ண்ள்ற்ன்ழ்க்ஷ

 கே.கவின், பொள்ளாச்சி.

எஸ்.எம்.எஸ்.


காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து...
கடவுளுக்கும் காசு கொடுத்து...
கடைசியில் கடவுளிடமே
காசு வேணும்ன்னு - 
கேட்கிறவன்தான் மனிதன்.
அ.செல்வகுமார், சென்னை-19


மைக்ரோ கதை


திருமணமான நாளில் இருந்து ராமசாமி தனது மனைவியைப் பிரிந்து இருந்ததே இல்லை.  பிரசவ நேரத்தில் கூட மாமியாரை உதவிக்கு தன் வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டார். இப்போது ராமசாமிக்கு வயது 85. அவருடைய நான்கு பிள்ளைகளும் வெளியூர்களில் வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் அவர் மனைவி தனது மகன் வீட்டுக்குப் போய் ஒரு மாதம் தங்கி இருந்து வருவதற்காகக் கிளம்பினார்.  ராமசாமிக்கோ அதிர்ச்சியாக இருந்தது.  தன்னைப் பிரிந்து செல்ல நினைக்கும் மனைவியை வேதனையுடன் பார்த்தார் ராமசாமி.

பக்கத்துவீட்டுப் பெண் ராமசாமியின் மனைவியிடம், ""ஏன் அவரைத் தனியா விட்டுட்டுப் போற ஆத்தா?'' எனக் கேட்டாள்.

""நான் ஒரு மாசம் அவரை விட்டுப் பிரிஞ்சா  அவர் நூறு வயசுக்கு மேல இருப்பாராம். ஜோசியக்காரன் சொன்னான்''  என்றார்.

சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.

யோசிக்கிறாங்கப்பா!

சிலரை மறந்துவிடுங்கள்...
சிலரை மன்னித்துவிடுங்கள்...
சிலரைக் கடந்துவிடுங்கள்...
சிலரை வெறுத்துவிடுங்கள்...
எவரையும் தூக்கிச் சுமக்காதீர்கள்-
வாழ்க்கை சுமையாகிவிடும்.

கே.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

அப்படீங்களா!

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது பிளாஸ்டிக் பொருள்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.  அது எளிதில் மண்ணில் மக்காது.  நீரில் கரையாது.  பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க,   பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. 

பிளாஸ்டிக் பொருள்களினால் கடல் மிகவும் மாசடைந்துவிடுகிறது.    நதிகள், சாக்கடைகளில் போடப்படும் பிளாஸ்டிக் பைகள்,  பொருள்கள்  எல்லாம் கடலில் கலப்பதால்,  கடல்நீர் மாசு அடைகிறது. கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. எனவே, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சீனாவில் பாலிவினில் ஆல்கஹால் (டயஅ)  எனப்படும் பொருளால் பைகளை தயாரித்து இருக்கிறார்கள்.  இந்த பைகளுக்கு நீரில் கரையும் தன்மை உள்ளதால் சுற்றுச் சூழலை மாசடையாமல் காக்கிறது. 

- என்.ஜே., சென்னை-116

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.