தவில், தப்பட்டை, டமாரம், மத்தளம், மிருதங்கம் இவை தோலிசைக் கருவிகள்.
யாழ், வீணை, பிடில் இவை நரம்புக் கருவிகள்.
வேய்ங்குழல், நாதசுரம், மகுடி இவை துளைக் கருவிகள்.
சப்ளாக் கட்டை, சாலதா இவை கஞ்சக் கருவிகள்.
யாழ், வீணை, குழல், மிருதங்கம், கோட்டு வாத்தியங்கள் இவை கச்சேரி வாத்தியங்கள் ஆகும்.
கொம்பு, தாதை, திருச்சினம், பூரி, சங்கு இவை கோயில் வாத்தியங்கள் ஆகும்.
முரசு, பறை, உறுமி, பம்பை, தாளம், நெடுங்குழல் இவை கிராம வாத்தியங்கள் ஆகும்.
திருடர்களையும், பொறுக்கிகளையும் கேடி (K.D) என அழைக்கின்றோம். இவை எப்படி உருவானது தெரியுமா?
ஓய்ர்ஜ்ய் ஈங்ல்ழ்ங்க்ஹற்ர்ழ் என்னும் இரு வார்த்தைகளின் முதலெழுத்துகள் சேர்ந்து உருவானதுதான் கே டி (K.D)
ஐந்தாம் படை
தாய்நாட்டுக்கு எதிராக எதிரி நாடுகளுடன் ரகசிய உறவு வைத்திருப்பவர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் சதி வேலை செய்யும் கூட்டாளியினருக்கும் ஐந்தாம் படை எனப் பெயர்.
இந்தப் பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
1936-இல் ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டபோது தளபதி பிராங்கோ மார்ட்ரிட் நகரைத் தாக்கினார். அதில் விமானப்படை, கப்பற்படை, தரைப்படை, பிரச்சாரப் படை என நான்கு படைகள் ஈடுபட்டன.
படைப்பிரிவில் சேராமலே கலகம் நடத்தியும் பலாத்காரத்தைக் கையாண்டும், அரசைக் கவிழ்க்க ஒரு துரோகப் படை உதவியதால், பிராங்கோ வெற்றி பெற்று சர்வாதிகாரி ஆனார்.
அதுவே ஐந்தாம் படை ஆனது.
("சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்'என்னும் நூலிலிருந்து)
மாவடு போடுவமா?
இந்த சொல்லை வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ, எப்படி பார்த்தாலும் அதே சொல்தான் வரும். ஆங்கிலத்தில் இந்த மாதிரி வருவதை பாலிண்ட் ரோம் (Palindrome) என்று அழைப்பார்கள்.
இதற்கு உதாரணம் Malayalam என்னும் வார்த்தை, தமிழில் விகடகவி, மாலா போலாமா, மாவடுபோடுவமா, தேருவருதே முதலியவை ஒரு புதுமை வாக்கியம்!
Pack my box with five dozen jugs of liquor' - இந்த வாக்கியத்தில் இருக்கிறது ஒரு புதுமை. அது என்ன புதுமை என்கிறீர்களா? இந்த ஆங்கில வாக்கியத்தில் "அ' முதல் "ழ' வரையிலான அனைத்து ஆங்கில எழுத்துகளும், அடங்கியுள்ளன.
- முக்கிமலை நஞ்சன்.
இப்படியும் ஓர் அறிவிப்பு!
மாநிலத்தில் செயற்கையாக ஒரு காட்டை ஏற்படுத்தி அதில் நிறைய மிருகங்களைவிட்டு வைத்திருக்கிறார்கள்.
காட்டுக்கு வெளியே ஓர் அறிவிப்பு!
உள்ளே போகக் கூடாது. மீறிக் செல்பவர்கள் சாப்பிடப்படுவார்கள்.
ஆதினமிளகி வீரசிகாமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










