அச்சம் தேவையில்லை: நடிகர் விஷால்
சென்னையில் தினமும் தொடர்ந்து 2,000-க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக அது குறைந்து வருகிறது.


சென்னையில் தினமும் தொடர்ந்து 2,000-க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக அது குறைந்து வருகிறது. இதையடுத்து, ""சென்னையில் கரோனா கட்டுக்குள் வந்துவிட்டது' என்று அறிவித்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். ஆனால், ""பரிசோதனைகள் குறைந்ததே பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்ததற்குக் காரணம் என்பதும், பரிசோதனைகள் குறைய, டெக்னீஷியன்களின் வேலைப்பளு உள்ளிட்ட பலவும் காரணம் என்பதுமே உண்மை'' என்கிறது மருத்துவக் குழு.
கரோனா சிகிச்சைக்கான பில் இத்தனை லட்சம் வரும் என்று முன்பே கூறியிருந்தால் யாரும் வெளியே வந்திருக்க மாட்டோமே என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். கரோனாவை விட மருத்துவமனை போடும் பில்லை நினைத்துத்தான் பலர் பயத்தில் இருக்கிறார்கள்.
நடிகர் விஷால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் தமிழ் நடிகர் இவர்தான். இந்தநிலையில் மருத்துவமனைக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி முறை மூலம் சிகிச்சை எடுத்து விஷால்மற்றும் அவரின் 82 வயது தந்தை ஜி.கே. ரெட்டி, மேலாளர் ஹரி ஆகியோர் ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது வலைதளத்தில் பேசியுள்ள விஷால், கரோனாவுக்கு முக்கியமான மருந்து எது? என்கிற ரகசியத்தை சொல்லியிருக்கிறார். அதன்படி அந்த மருந்துகளின் புகைப்படங்களையும் சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். மருந்துகளின் பெயர்களை வெளியிட்டு விஷால் கூறியிருப்பதாவது...
""தயவு செய்து உங்களின் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். இந்த மருந்துகள் சென்னையில் இருக்கும் அனைத்து ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துக் கடைகளில் கிடைக்கும். கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பும் சரி, பாதிப்பு ஏற்பட்டாலும் சரி பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். அந்த தைரியம் தான் முக்கியமான மருந்து. கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்து மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். மேலும் கரோனாவுக்கு பலியானவர்களின் விவரங்களை அறிந்தும் பயப்படுகிறார்கள். கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பும் பயப்படுகிறார்கள். பாதிப்பு ஏற்பட்டாலும் பயப்படுகிறார்கள். பயந்தால் தான் பிரச்னை பெரிதாகும். இந்த வைரûஸ நம்மால் எதிர்த்துப் போராட முடியும் என்று நமக்கு நாமே தைரியம் சொல்லிக் கொள்ள வேண்டும்.
சுற்றியுள்ள மக்களுக்கு உதவுவதற்கான உத்வேகத்துடனும், வைரûஸ எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளுடனும், நோயாளிகளை வழி நடத்துவதை எனது கடமையாகப் பார்க்கிறேன். இப்போது நோயாளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டி, அவர்களைப் பயத்திலிருந்து மீட்க உதவும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவே நான் விரும்புகிறேன். கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற உணர்வுப்பூர்வமான நம்பிக்கையை என்னால் அவர்களிடம் ஏற்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி.
ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டால் யாராலும் கவனிக்க முடியாது. முழு கவச உடையுடன் பல மணி நேரம் நிற்பது அவ்வளவு எளிதானது அல்ல. மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். அதனால் நீங்கள் வீட்டிலேயே தங்கி, சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, முகக்கவசம் அணிந்துகொள்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு முன்மாதிரிதான். சூப்பர் ஹீரோ. இந்த நேரத்தில் டாக்டர் ஹரி சங்கருக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்கிறார் அவர்.
வயதானவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் ரொம்ப கஷ்டம் என்று கூறப்படும் நிலையில் விஷாலின் தந்தை மருத்துவமனைக்குச் செல்லாமலேயே குணமாகியிருப்பது மற்றவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...