திரைக்கதிர்
அதர்வா ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் வாணி போஜன். இதுதவிர, சூர்யா தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் கமிட் செய்யப்பட்டுள்ளார்.


அதர்வா ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் வாணி போஜன். இதுதவிர, சூர்யா தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் கமிட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டிரான்ஸ்பரன்ட் புடவையில் தனது அழகைக் காட்டியவாறு வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
---------------------------
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் "ஆதிபுருஷ்' எனும் 3டி படத்தில் நடிகர் பிரபாஸ், ராமர் வேடத்தில் நடிக்க உள்ளார். சீதை வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
---------------------------
நடிகை யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவதும், அதனால் ரசிகர்களும் தாறுமாறாக விமர்சனம் செய்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
---------------------------
விஜய் ஆண்டனி முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் "நான்'. முதன் முதலில் இந்தப் படத்தின் கதையை நடிகர் தனுஷிடம் சொல்லச் சொல்லித் தான் தயாரிப்பாளர் அனுப்பி வைத்தாராம். ஆனால் தனுஷ் முன்னால் அமர்ந்து கதை சொல்வதற்கு மிகவும் தயங்கி சொதப்பி விட்டாராம் இயக்குநர்.
---------------------------
வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து "அஜ்நபி' எனும் நாவலைத் தழுவி ஒரு படத்தை எடுக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கலைப்புலி எஸ் தாணுதயாரிப்பில் "வாடிவாசல்' எனும் படத்தை இயக்க உள்ளார்.
---------------------------
தென்னிந்திய அளவில் முதல் பெரிய படமாக நானி நடித்துள்ள தெலுங்குப் படமான "வி' படம் செப்டம்பர் 5- ஆம் தேதியன்று ஓடிடியில் ரிலீசாக உள்ளது. ""இந்த 12 வருடங்களாக நீங்கள் எனக்காக தியேட்டர்களுக்கு வந்துள்ளீர்கள். இப்போது நான் உங்கள் வீட்டிற்கு நன்றி சொல்ல வருகிறேன்'' என்கிறார் நானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...