முகக்கவச இயந்திரம்!
சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹாங்காங்கில் மருத்துவ தரம் வாய்ந்த முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.


சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹாங்காங்கில் மருத்துவ தரம் வாய்ந்த முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஹாங்காங்கிலுள்ள "நியூ வேர்ல்டு டெவலப்மெண்ட்' என்ற தொழிற்சாலையின் பொது மேலாளர் அட்ரியன் செங், இந்த இயந்திரங்களைப் பொருத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அவருடைய தொழிற்சாலையில் 20ஆயிரம் முகக்கவசங்களைத் தினம்தோறும் இதற்காகத் தயாரிக்கிறார்கள். தன்னார்வ குழுக்களின் உதவியுடன் ஹாங்காங் பகுதியில் 35 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் வாழும் ஒருவர் இந்த இயந்திரங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் 5 முகக்கவசங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அந்தப் பகுதியில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி முகக்கவசங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இலவச முகக்கவசங்கள் தருகிறார்கள் என்றதும் கூட்டம் முண்டியடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஸ்மார்ட் கார்டு ஏற்பாடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...