சிரி...சிரி...
""படத்துக்கு அப்படி என்ன ட்ரெண்டிங்கான டைட்டில் வெச்சிருக்கீங்க?''""தியேட்டர் இல்லனா ஓ.டி.டி!''


""படத்துக்கு அப்படி என்ன ட்ரெண்டிங்கான டைட்டில் வெச்சிருக்கீங்க?''
""தியேட்டர் இல்லனா ஓ.டி.டி!''
நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.
""என் புருசனுக்கு பெண் பேய் தான் பிடிச்சிருக்குன்னு எப்படி சாமி சொல்றீங்க?''
""தினமும் டிவி சீரியல் பார்க்க வந்து உட்கார்ந்து கிறாருன்னு நீ தானம்மா சொன்ன?''
""இதுக்குத் தான் ஓட்டுக் கேட்க தனியா போகக் கூடாதுன்னு சொல்றது''
""என்னாச்சு தலைவா?''
""ஒரு வீட்டுல போய், "அம்மா...' ன்னு கூப்பிட்டதுமே, "அடுத்த வீடு
பாருப்பா' ன்னு சொல்றாங்கய்யா''
""ஒரு 1000 ரூபாய் கடனா கொடுத்தீங்கன்னா ஒரு வாரத்துல திருப்பிக் கொடுத்துடுவேன் சார்!''
""தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தையே கடன் தான்''
""அப்ப கை மாத்தா குடுங்களேன்''
""அந்த பாடகருக்கு சபாவுல அப்படி என்னதான் கொடுத்திருப்பாங்க?''
""ஏன் அப்படி கேக்குறீங்க?''
""தந்தானே... தந்தானே... தந்தானே... தந்தானே... ன்னு ஒரே வரியையே திரும்பத் திரும்ப பாடறாரே''
காதலி: நான் உண்டாயிட்ட மாதிரி நேத்து நைட்டு கனவு கண்டேன் ரமேஷ்... கூர்கா விசில் ஊதினதுல கலைஞ்சு போச்சுடா...
காதலன்: விசில் ஊதினா கர்ப்பம் கலையுமா என்ன?
-வி. ரேவதி,
தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...