தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி...

""தலைமறைவா இருந்த தலைவரை போலீஸ் எப்படி கண்டுபிடிச்சாங்க?''""வெற்றிகரமாக நூறு நாள் தலைமறைவாக இருந்ததைக் கொண்டாடி, செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வெச்சு மாட்டிக்கிட்டாரு!''

News image
Updated On :7 நவம்பர் 2021, 12:30 am

DIN

""தலைமறைவா இருந்த தலைவரை போலீஸ் எப்படி கண்டுபிடிச்சாங்க?''
""வெற்றிகரமாக நூறு நாள் தலைமறைவாக இருந்ததைக் கொண்டாடி, செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வெச்சு மாட்டிக்கிட்டாரு!''

நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.

அவர்: காசு இல்லைனா கட்டின பெண்டாட்டி கூட மதிக்க மாட்டா .
இவர்: என் பெண்டாட்டி அப்படி இல்லை .
அவர்: நிஜமாவா ?
இவர்: ஆமாம். காசு இருந்தா கூடஅவ என்னை மதிக்க மாட்டா .

""தலைவர் ஆற்றில் மணல் அள்ளினார். இது எந்தக் காலம்?''
""ஆற்றில் தண்ணீர் ஓடாத காலம் சார்''

அப்ரோஸ் பானு,
சென்னை- 131.

வந்தவர்: சார் வெளியே போன என் மனைவியைக் காணலை .
போலீஸ்: அடையாளம் சொல்ல முடியுமா ?
வந்தவர்: அவ வெளியே போகும் போது மேக் அப் போட்டுனு போனாளா இல்லையான்னு நான் பார்க்கலையே சார் .

""ஒரே ஒரு இடத்தைத் தவிர எல்லா இடத்திலும் தேடியாச்சு. பொருள் கிடைக்கல''
""தேடாத அந்த ஒரே ஒரு இடம் எது?''
""தொலைந்த பொருள் இருக்கும் இடம் தான்''

- ஏ. நாகராஜன்,
பம்மல்.

அவர்: தலைவருக்கு சுகர் இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு .
இவர்: ஏன் ?
அவர்: இப்ப எல்லா ஸ்வீட் கடை திறப்பு விழாவுக்கும் தலைவரைத்தான் கூப்பிடுறாங்க .

-தீபிகா சாரதி,
சென்னை -5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.