தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி... 

""எனக்கும் கல்யாணம் ஆகி 25 வருஷம் முடிஞ்சு போச்சு. இதுவரைக்கும் என் மனைவியை நான் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட திட்டினதில்லை''""எல்லாம் என்னை மாதிரியே மனசுக்குள்ள தானாக்கும்?''

News image
Updated On :21 நவம்பர் 2021, 12:30 am

DIN

""எனக்கும் கல்யாணம் ஆகி 25 வருஷம் முடிஞ்சு போச்சு. இதுவரைக்கும் என் மனைவியை நான் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட திட்டினதில்லை''
""எல்லாம் என்னை மாதிரியே மனசுக்குள்ள தானாக்கும்?''

""வெறும் வயித்துலதான் ஆபரேஷன்பண்ணனும்னு சொல்றாங்களே, ஏன் டாக்டர்?''
""ஷர்ட், பனியன் எல்லாம் போட்டிருந்தா, கட் பண்ணும்போது கிழிஞ்சு போயிடாதா?''

""டாக்டர் கிட்டேயும், வக்கீல் கிட்டேயும் தான் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லுவாங்க... நீங்க என்ன அதுல தலைவரையும் சேர்த்துக்கறீங்க?''
""தலைவர்தான் டாக்டர் பட்டம் வாங்கினவர் ஆச்சே''

""டைரக்ஷன், பாடல்கள், இசை, எடிட்டிங்... இதுக்கெல்லாம் சிலைடு போட்டு காட்டினவங்க, கதை யாருன்னே போடலையே?''
""அப்படி ஒண்ணு இருந்தா போட்டிருக்க மாட்டாங்களா?''

""என்ன அந்த பிச்சைக்காரன் உங்க வீட்டுக்கு வெளியே உட்கார்ந்துருக்கான்?''
""இன்னும் சமையல் ஆகலைப்பா... அரை மணி நேரம் ஆகும்ன்னு சொன்னேன்.
அதுக்கு அவன், பரவாயில்ல தாயி... அதுவரைக்கும் இங்கே உட்கார்ந்து மொபைல் நோண்டிக்கிட்டிருக்கேன்னு சொல்லிட்டு உட்கார்ந்துருக்கான்''

""என் மனைவி, என்னோட கவுரவம்தான் முக்கியம்னு நினைக்கிறவ''
""எப்படிச் சொல்றீங்க?''
""நான் சமைக்கும்போதோ, புடவை துவைக்கும்போதோ வீட்டுக்கு யாராவது வந்துட்டா, என்னை அப்படியே வச்சிட்டு வரச் சொல்லிடுவா!''

- வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.