சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி...சிரி...

அவர்: அந்த ஆளுக்கு ஆனாலும் ரொம்ப பணத்திமிரு.இவர்: நிஜமாவா ?அவர்: ஆமாம் அவர் வாக்கிங் கூட கார்லதான் போவாரு.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

அவர்: அந்த ஆளுக்கு ஆனாலும் ரொம்ப பணத்திமிரு.
இவர்: நிஜமாவா ?
அவர்: ஆமாம் அவர் வாக்கிங் கூட கார்லதான் போவாரு.

-தீபிகா சாரதி,
சென்னை -5.


 ""டாக்டரா? வக்கீலா இவரு ? வெள்ளை கோட்டு போடாமல்  கறுப்பு கோட்டு போட்டிருக்காரே?''
""வெள்ளை  கோட்டு தாங்க அது; வாஷ் பண்ணி நாளாச்சாம்''

""பழமொழி எழுதச் சொன்னா என்னன்னவோ வரைஞ்சி வச்சிருக்க?''
""சார், இது பழமொழி... உங்களுக்குப் புரியாது, பழங்களுக்குத்தான் புரியும்''
பா.சக்திவேல், கோயம்புத்தூர்.


 ""இந்த பாம்பு ஏன் படம் எடுத்தா சீக்கிரமே தலையைத் தொங்கப் போட்டுடுது?''
 ""அது எடுக்கிறது, குறும் படமாம் !''

 ""ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சுப் பேசினா உடனே காதலர்களாகத்தான் இருக்கணுமா டாக்டர் ?''
 ""அதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயமா கணவன் மனைவியா இருக்க முடியாது. அது உறுதி''

எம் அசோக்ராஜா,  
அரவக்குறிச்சிப்பட்டி.


""நம்ப சிட்டிபாபுவோட ஊரை "ஸ்மார்ட் சிட்டி'யா மாத்தப் போறாங்களாம்.''
 ""அதுக்கென்ன இப்ப?''
 ""அவனோட பேரையும், "ஸ்மார்ட் சிட்டிபாபு' ன்னு மாத்திக்கப் போறானாம்! ''

-வி. ரேவதி,
தஞ்சை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.