பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யுத்தகளத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட "நிழல் நடை' என்ற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கி வரும் படம் "திரும்பிப்பார்'.
படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளன. இப்ராஹீம் எழுதி இயக்குகிறார்.
வித்யா பிரதீப், ரிஷி ரித்விக், ராஜ்குமார், பிக்பாஸ் டேணி,நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் அமீர், சிம்பு தேவன், நடிகர் ஆர். கே. சுரேஷ், ஜி. வி. பிரகாஷ், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.
இன்றைக்கும் முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களை விடவும் அதிக பிஸியில் இருப்பவர் எஸ்.ஜே.சூர்யாதான். நாள் ஒன்றுக்கு இரண்டு கால்ஷீட்களில் நடித்து வருகிறார். அதனை முடித்து விட்டு வீடு வரும் அவர் மீண்டும் அடுத்த நாள் மாலை எழுந்து மீண்டும் அடுத்த கால்ஷீட்டுக்குச் செல்கிறார். முன்பு சினிமாவில் அவருக்கு சில பல காதல்கள் இருந்தாலும் எதுவும் கல்யாணம் வரை செல்லவில்லை. இதற்கிடையே வீட்டில் அவருக்குத் தீவிரமாகப் பெண் பார்த்து வருகிறார்கள்.
ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்காக இதுவரை ரஜினி ஒரு படம் கூடச் செய்து கொடுத்ததில்லை. ஆனாலும் ரஜினிக்கு எப்போது ஆலோசனை தேவைப்பட்டாலும் உடனே அழைத்துக் கேட்பது ரவிச்சந்திரனைத்தான். இப்போது ரவிச்சந்திரன் சிரமத்தில் இருப்பதால் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் அவர் ரஜினியிடம் உதவி எனக் கேட்டு நின்றதில்லை. இப்போது ரஜினியே அவருக்காக ஒரு படம் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்.
அருள்நிதியின் பயணத்தில் "டிமாண்டி காலனி' ஒரு மைல்கல் படம். அதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து, அருள்நிதி இருவரிடம் பலரும் கேட்கும் கேள்வி, "டிமாண்டி காலனி பார்ட் 2' எப்போது வரும்?" என்பதுதான். இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது. விரைவில் பார்ட் 2-வை ஆரம்பிக்கிறார்கள். ஹீரோயினாக நடிக்கப் பிரியா பவானி சங்கரிடம் பேசி வருகிறார்கள்.
தனது மகன் லிங்காவிற்காக தானே நல்ல நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார் தனுஷ். இதனால் விஜய் மகன் போலவே, தனுஷ் மகனும் நிச்சயம் சினிமாவிற்கு வந்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள். "அடுத்தடுத்த வருடங்களில் மகனுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணுங்க பிரதர்' என்று வெற்றி மாறனிடம் சொல்லி வைத்திருக்கிறாராம். அதேபோல், இன்னொரு தகவல், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இயக்குநராவதில் ஆர்வம் காட்டுகிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


