திரைக்  கதிர்

2005-இல் வெளியாகி தியேட்டர்களில் மாதக்கணக்கில் ஓடி வசூலைக் குவித்த படம் "சந்திரமுகி'.
திரைக்  கதிர்
Updated on
1 min read

2005-இல் வெளியாகி தியேட்டர்களில் மாதக்கணக்கில் ஓடி வசூலைக் குவித்த படம் "சந்திரமுகி'. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, இயக்குநர் பி.வாசு என அதில் நடித்த பலருக்கும் தனிப்பாதை அமைத்துக் கொடுத்த படம் அது. பி.வாசுவை சந்திக்கும் பலரும் "சந்திரமுகி 2' எப்போது வரும் என கேட்க ஆரம்பித்தனர். லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரவி மரியா, சுபிக்ஷா, ராதிகா நடிப்பில் "சந்திரமுகி 2' ஆக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முழு வீச்சாக நடந்து வந்தாலும் ஜோதிகா கதாபாத்திரம் போல், இதிலும் வலுவான ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அந்த ரோலுக்கு த்ரிஷா, லட்சுமிமேனன் என பலரின் பெயர்கள் பரீசீலிக்கப்பட்டாலும் யாரும் முடிவாகாமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.இந்நிலையில் தான் அந்த ரோலில் கங்கனா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

-------------------------------------------------------

ஒரு வருடத்துக்கு சினிமாவை விட்டு விலகுகிறார் ஆமிர் கான். "எப்போது மீண்டும் நடிக்க வருவீர்கள்?" என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஓர் ஆண்டுக்குப் பிறகுமீண்டும் நடிக்க வருவேன். இப்போதைக்கு எதிலும் நடிக்கவில்லை. நீண்ட நாள்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். இப்போது எனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். ஆனால் "சலாம் வெங்கி'யில் சிறிய கதாபாத்திரத்தில் என்னைக் காணலாம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

-------------------------------------------------------

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர் ஸ்ருதிஹாசன். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த நிலையில் அவர் நடித்துள்ள இரு படங்கள் ஜனவரியில் வெளியாகவுள்ளது. சிரஞ்சீவியின் "வால்டேர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் "வீரசிம்ஹா ரெட்டி' என இரு படங்களும் தயார். பிரபாஸþடன் ஹிந்தியில் நடித்து வரும் படமும் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறது.

-------------------------------------------------------


"செத்தும் ஆயிரம் பொன்' படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, "தலைவாசல்' விஜய், கீதா கைலாசம், "பிளாக் ஷீப்' நந்தினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிருபாகரன் பட தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாட்சி பணியாற்றும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com