சிரி... சிரி... 

""என்னய சாதம்.. இப்படி குழஞ்சு போச்சு. பார்த்து வடிக்கக் கூடாது..''""சாப்பாடு செய்யும்போது பக்கத்துல வந்து குழஞ்சி, குழஞ்சி பேசினா இப்படித்தான் இருக்கும்''
சிரி... சிரி... 


""என்னய சாதம்.. இப்படி குழஞ்சு போச்சு. பார்த்து வடிக்கக் கூடாது..''
""சாப்பாடு செய்யும்போது பக்கத்துல வந்து குழஞ்சி, குழஞ்சி பேசினா இப்படித்தான் இருக்கும்''

-வண்ணை கணேசன், 
சென்னை.


""உங்க வீட்டில் 60 கிலோ தங்கம் இருக்குன்னு தகவல் வந்திருக்கு.. வீட்டை சோதனையிடலாமா?''
"" ஒ! தாராளமா.. சோதனை போட்டுக்குங்க. வீட்ல இருக்கிற தங்கம் என் மனைவிதான். அவ எடை 60 கிலோ''

- டி.ஜெயசிங்  
கோயம்புத்தூர்.


""என் மனைவி மாதிரி யாராலும் சீரியல் பார்க்க முடியாது''
""எப்படி?''
""சீரியலில் யாராவது இறந்துட்டா  வீட்டை அலசிவிட்டு தலை குளிச்சிடுவா?''

-பொ.பாலாஜி, 
அண்ணாமலை நகர்.

""என்னைப் பார்க்க ஆறு மணிக்கு மேலே வா..!''
""உங்க வீட்டுல மாடியே இல்ல..எப்படி மேலே வருவது?''

-கு.ராம்குமார், 
வாடமங்கலம்.

""என்ன இது .. தோசை புதுசா இருக்கே?''
""ஆமாங்க.. இது கொத்து தோசை.  கல்லைவிட்டு தோசை வரலை. நல்லா கொத்திவிட்டேன்..''

-கே.விஸ்வநாதன்,  
கோயம்புத்தூர்.


""உங்க நகையை திருடியது இவன்தான்னு எப்படி சொல்றீங்க..?''
""அது போலி நகைன்னு என் வீட்டுக்கு வந்து சண்டை போட்டது அவன்தானே''

-ஆ.மாடக்கண்ணு, 
பாப்பான்குளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com