திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி...சிரி...

"இந்த மாணவனோட  அப்பா பெரிய ரவுடின்னு நினைக்கிறேன்"" எப்படி சொல்றீங்க ஐயா?"" "பொருள்' கூறுக வினாவுக்கு  "கத்தி, வீச்சு, அருவாள்' னு பதில் எழுதியிருக்கானே?"

News image
Updated On :1 மே 2022, 12:30 am


"இந்த மாணவனோட  அப்பா பெரிய ரவுடின்னு நினைக்கிறேன்"
" எப்படி சொல்றீங்க ஐயா?"
" "பொருள்' கூறுக வினாவுக்கு  "கத்தி, வீச்சு, அருவாள்' னு பதில் எழுதியிருக்கானே?"

புதுவண்டி ரவீந்திரன்,
சோளிங்கர்.

"தலைவர் என்ன மூடுல இருந்தார்னு தெரியலை!"
 "என்ன விஷயம்...?"
" இரட்டைக் குழந்தைகளுக்கு, "லஞ்சக்குமார், லாவண்யக் குமார்' னு பேர் வச்சு அனுப்பிட்டாரே!"

-வி. ரேவதி,
தஞ்சை.

பெண் : (பிச்சைக்காரனிடம் ) "எங்க வீட்டு ஐயா தோத்ததுக்கு நீ ஏம்ப்பா 
கவலைப் படறே..?!"
பிச்சைக்காரன் :  "அவருக்கு தேர்தல் செலவுக்கு நான் அஞ்சு லட்சம் ரூபாய் கடன் குடுத்தேன் மேடம் "

துடுப்பதி வெங்கண்ணா,
பெருந்துறை

"பொண்ணுக்கு சிலம்பாட்டம் தெரியும்தான் அதுக்காக பொண்ணு பார்க்க வரும்போது சிலம்பாட்டம் ஆடிக்கிட்டே வரணுமா? "
"பாடத்தெரியும்னு சொன்னா மட்டும் பாடிக் காமின்னு கேட்கறீங்க இல்லே "

மு. மதிவாணன்,
அரூர் 

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்ங்க...
சந்தோஷம் டார்லிங்... ஆனா எனக்கு ஒரு பிரச்னையும் இப்ப இல்லையே!
என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

உலகத்துலயே பெரிய ஏமாற்றம் எது தெரியுமா ?
எதுன்னு நீயே சொல்லு...
செல்போன சார்ஜர்ல போட்டுட்டு.. சுவிட்ச் போடாமல் 2 மணி நேரம் கழிச்சு போய் பார்க்கிறது தான் !

எம். ஏ. நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.