வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

காதலி:  சுண்டலுக்கு நான்தான் தினமும் காசு கொடுக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும்.காதலன்: கவலைப்படாதே! உன் கல்யாணத்துக்கு நான் மொய் எழுதும்போது, எல்லாத்தையும் சேர்த்து எழுதிடறேன்.

News image
Updated On :8 மே 2022, 12:30 am

காதலி:  சுண்டலுக்கு நான்தான் தினமும் காசு கொடுக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும்.
காதலன்: கவலைப்படாதே! உன் கல்யாணத்துக்கு நான் மொய் எழுதும்போது, எல்லாத்தையும் சேர்த்து எழுதிடறேன்.


தீபிகா சாரதி, சென்னை 5.

தொண்டர் 1: ""மா.செ.க்கு வேண்டாதவங்க, அவரை குத்தாட்டத்துல கலந்துக்க வச்சு, அதை வீடியோ எடுத்து வைரலாக்கி அவர் பதவிக்கு ஆப்பு வெச்சிட்டாங்க!
தொண்டர் 2: அப்ப அது  "உள் குத்தாட்டம்'.

-சம்பத்குமாரி, பொன்மலை.

வாடிக்கையாளர்: என்ன அய்யா! உங்க ஓட்டல் வடையை சாப்பிட்டுவிட்டு ஓடவே முடியல்லையே?
ஓட்டல் உரிமையாளர்: ஆமை வடை ஆச்சே! மெதுவாகத்தான் ஓடுவீங்க..!

டி.மோகனதாஸ், நாகர்கோவில்

அவர்: ""கடன் வாங்கிட்டு இன்னும் தராமல் இருக்கீங்களே?''
இவர்: "சும்மா வாங்கலியே? "கடன்' தானே 
வாங்கியிருக்கேன்?''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி

காதலன்: உனக்காக நான் காதல் கோட்டையைக் கட்டப் போறேன்!
காதலி: தயவு செய்து அத எம்பேர்ல எழுதி வெச்சிடு.. டியர்!

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்

திருடன்: திருடுடறதை அடியோடு விட்டுட்டேன் சார்!
இன்ஸ்பெக்டர்: அப்டின்னா நீ இப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்றே?
திருடன்: திருடுவது எப்படின்னு "ஆன்லைனில்'  பாடம் நடத்துறேன்!

-ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.